வட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே

சத்தியப் பிரமாணம்!

வட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
இந்த நியமனம் எதிர்வரும் 16ஆம் திகதி  செவ்வாய்கிழமை முதல் அமுலுக்கு வரும் நிலையில், இந்த சத்தியப் பிரமாணம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியராக கடமையாற்றிய ரெஜினோல் குரே, 1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய ரெஜினோல் குரே, மேல் மாகாண முதலமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top