வெளிவராத பல தகவல்களை வெளியிடத் தயாராகும்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா


பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான ஊழல், மோசடிகள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான இதுவரை வெளிவராத பல தகவல்களை நாடாளுமன்ற உரையில் வெளியிட உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்நேலியகொட காணாமல் போக செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை வெளிவராத பல தகவல்களை பொன்சேகா தனது உரையில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top