லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

சைக்கிளில் பயணித்தவர்களுக்கு  பலத்த காயம்!!

சாய்ந்தமருதில் சம்பவம்

                                                (எஸ்.அஷ்ரப்கான்)

இறக்காமத்திலிருந்து சாய்ந்தமருதுக்கு மண் ஏற்றிக் கொண்டு வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இச் சம்பவம் இன்று 2016.02.08 ம் திகதி 2 மணியளவில் சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் இடம்பெற்றுள்ளது.
சாய்ந்தமருது GMMS பாடசாலையில் 4ம் தரத்தில் கற்கின்ற தனது மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றபோது சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் கனரக வாகம் ஒன்றுடன் மோதுண்டதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலத்த காயத்துக்குள்ளானார்கள். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது.

இது பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top