ஈராக்கில் தற்கொலை படை தாக்குதல்

பலியானவர்களின் எண்ணிக்கை 125 பேராக அதிகரிப்பு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 125 பேராக அதிகரித்துள்ளது.,; 176 பேர் காயமடைந்துள்ள்னர்.
ஈராக், சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, உலகெங்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் .எஸ்., பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டு வருகிறது..எஸ்., பயங்கரவாத அமைப்பு கைப்பற்றிய பகுதிகளை, ஈராக் படைகள் மீட்டு வருகின்றன. சமீபத்தில், பலுஜா நகரை ஈராக் ராணுவம் மீட்டது. இருப்பினும், தலைநகர் பாக்தாத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று, அரசுக்கு எதிராகவும், பிரதமர் ஹைதர் அல் - அபாதிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக, .எஸ்., பயங்கரவாத அமைப்பினர் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் நடத்திய இரண்டு பயங்கர தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 125 பேர் கொல்லப்பட்டனர்; 176 பேர் காயமடைந்தனர்.
ரமழான் புனித  நோன்பை முடித்து, கடைகளுக்கு செல்வதற்காக சாலைகளில் மக்கள் குவிந்திருந்தனர். அப்போது, பாக்தாத் நகரின் மையப் பகுதியான காரடாவில் உள்ள வர்த்தகப் பகுதியில், வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, அதை வெடிக்கச் செய்தான் எனத் தெய்விக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மட்டும், 120பேர் கொல்லப்பட்டனர்; 160 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு, .எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெடிகுண்டு வெடித்ததால், அப்பகுதியில் உள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த தாக்குதலில் பற்றிய தீயை அணைக்கும் பணி, நேற்று காலை வரை நடந்தது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில், நுாற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு பிரதமர் ஹைதர் அல் - அபாதி வந்தபோது,அவருக்கு எதிராக மக்கள்கோஷமிட்டனர்.

இதற்கிடையே, பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 16 பேர் காயமடைந்தனர். ஆனால், இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top