துருக்கி வன்முறை
: பலி 265 ஆனது
கிளர்ச்சிக்கு காரணமான
2839 ராணுவத்தினர் கைது
துருக்கியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் முயற்சித்தது.
இதனை எதிர்த்து நடந்த கிளர்ச்சி வன்முறையாக வெடித்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை
265 ஆக உயர்ந்துள்ளது.
போராட்டத்தில்
பலியானவர்களில் 161 பேர் அரச பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்.. ராணுவ கிளர்ச்சியாளர்களில்
104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1440 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது
குறித்து செய்தியாளர்கள்
சந்திப்பில் பேசிய பிரதமர் பினாலி எல்டிரிம்,
துருக்கியில் ஏற்பட்ட ராணுவ புரட்சிக்கு எதிரான
போராட்டத்தில் 265 பேர் வரை
உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான
2839 ராணுவத்தினரை பாதுகாப்புப் படையினர்
கைது செய்துள்ளனர்.
பொது மக்கள்
மீது துப்பாக்கிச்
சூடு தாக்குதல்
நடத்தியவர்கள் துர்கிஷ் கிளர்ச்சியாளர்களை
விட மோசமானவர்கள்.
ராணுவ
புரட்சியை கட்டுப்படுத்த
களத்தில் இறங்கிய
பொதுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது
போன்ற கிளர்ச்சிகள்
தொடர்கதையாகி விடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக்
கொள்கிறேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment