பாக்கிஸ்தானில் வெள்ளம்: 31பேர் பலி

பாக்கிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் சித்ரால் மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பேய் மழையில் சிக்கி 8 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 38 உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 17 பேரை காணாவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையோர பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரனமாக சுமார் 30 வீடுகள் இடிந்துள்ளன.
இதற்கு பாக்கிஸ்தான்-தெஹ்ரீக்--இன்சாபின் தலைவர் இம்ரான் கான் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளையும், காணாமல் போனவர்களை மீட்கும் செயல்களில் அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மாகாண பேரழிவு நிர்வாக ஆணையம் (PDMA)  வெளியிட்ட ஒரு அறிக்கையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழூச்சில் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேபி ஆளுநர் இக்பால் ஜாபர், வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தம் மற்றும் துக்கத்தை தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top