உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் தாக்குதல்

அமெரிக்காவின் சதிதிட்டமே அதிர்ச்சி தகவல்கள்

உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்படப்போவது அமெரிக்க அரசுக்கு முன்பே தெரிந்திருந்தது என்றும் அதற்கு அமெரிக்கா ஒத்துழைத்தது என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அங்குள்ள கமெராமேன் கூறியுள்ளது உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் இட்டை கோபுரம், 2002, செப்டம்பர் 11, அன்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் அல் உம்மா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அது உலகையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அதற்கு, பின்லேடன் தலைமையிலான அல் உம்மா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் விளைவாக, அந்த இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்ததும். அதன் தலைவனான பின்லேடனை கொன்றதும் உலகம் அறிந்ததுதான்.
அப்படியிருக்க, இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது ஒன்றும் எதிர்பாரமல் நடந்தது அல்ல. செப்டம்பர் 11 இரட்டை கோபுரம் தாக்கப்படப் போவது புஷ் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு தெரிந்திருந்தது.
ஆனால், அதை முறியடிக்கும் நடவடிக்கைக்கு மாறாக, வர்த்தக மையத்திலும் விமான நிலையத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது என்றும் வர்த்தக மையத்தில் இருந்த முக்கியமான பெட்டகங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டது என்றும் கர்ட் சொனென்ஃபெல்ட்(Kurt Sonnenfeld) ஆதாரங்களுடன் கூறுகிறார்.

கர்ட், அப்போது, தனது 39 வயதில் அமெரிக்காவின் உள்நாட்டு ஆயுத பாதுகாப்பு துறையில் பணியாற்றினார். அது அமெரிக்காவின் M 15 க்கு சமமானது.
அந்த பேரழிவு திட்டம், ஜார்ஜ் W புஷ்ஷின் நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தும் அவர்களும் இந்த சதியில் ஒத்துழைத்தனர் என்று இப்போது கர்ட் கூறுகிறார்.
அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடக்கப்போவதை ஐக்கிய அமெரிக்க உளவுதுறையும் எச்சரித்திருந்தது. உலக வர்த்தக மையம் 6 ல் இருந்த முக்கியமான பெட்டகம் அங்கிருந்து காலிசெய்யப்படுவதற்கு இந்த அறிவுறுத்தலே காரணமாக இருந்தது என்கிறார்.
மேலும், உலக வர்த்தக மையம் 4 ல் முன்னெச்சரிக்கைக்கான நகர்வுகள் இருந்துள்ளது. அப்போது நியூயோர்க் டைம்ஸில் வெளியான கட்டுரையிலும் பெட்டகங்கள் பாதுகாக்கப்பாக இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 1,000 டன் தங்கம், வெள்ளி பொருட்கள் சேதமின்றி இருந்துள்ளது. உலக வர்த்தக மையம் 7 முற்றிலும் அழிந்தபோதும் இவைகள் எப்படி பாதிக்கப்படாமல் இருந்தது. எனவே வர்த்தக மையம் 7 ல் நடந்தது என்ன என சந்தேகம் எழுப்புகிறார்.
இந்த கட்டடத்தில் விமானம் தாக்கிய சேதமில்லை. கட்டட வடிவமைப்பில் சேதமில்லை. ஆனால், வர்த்தக மையம் 7 மட்டும் தனிபகுதியாக நுட்பமாக இடிந்திருக்கிறது. ஒரு 47 மாடி கட்டடம் 6.5 வினாடிகளுக்குள் அதன் பல தளங்களுக்கிடையே எந்த தடையும் இல்லாமல் முற்றிலும் அதன் அடித்தளத்திலே இடிந்து விழுவது சாத்தியமில்லை சந்தேகத்துக்கு உரியது என்கிறார்.
கர்ட்டின் சொந்த வாழ்க்கை வினோதமானது. 2002 ல் அவர் மீது தன்மனைவி நான்சியை கொன்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலொரடோவில், டென்வரில் உள்ள வீட்டில் அவருடைய 36 வயது மனைவியை தலையில் சுட்டுக்கொன்ற குற்றம் அவர் மீது பதிவாகியுள்ளது. ஆனால், அவர் அந்த சூழலில் இந்த ஆதாரங்களை வெளியிடவில்லை.

அப்போது, அவர் அமெரிக்காவை விட்டு அர்ஜெண்டினா செல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் இப்போது துணிவோடு தன் மவுனத்தை கலைப்பதாகவும் கூறியுள்ளார்..
ஆனாலும், அவருக்கு 54 வயதாகிவிட்டபோதிலும், தற்போதும் சட்டரீதியாக தேடப்படும் குற்றவாளியாகவே உள்ளார். அந்த கோபமும் அவருடைய பேச்சில் தெரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. .
அர்ஜெண்டினாவில் அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருப்பதாக கூறினாலும் அமெரிக்காவில் தனது குடும்பத்தையும் கொலொரடோ மலைகளையும் இழந்துவிட்டதாகவும் அமெரிக்கா வரும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை என்றும் வருந்துகின்றாராம். .
மேலும்அர்ஜெண்டினாவில் இந்த சதித்திட்டம் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top