குவாண்டீல் பலோச் ’ஆணவக்கொலை’அண்ணன் கைது,
குடும்ப கெளரவத்தை காக்கவே கொலைசெய்தேன்’ என ஒப்புதல்
பாகிஸ்தான்
நடிகை குவாண்டீல்
பலோச் ’ஆணவக்கொலை’
செய்யப்பட்டதில் அவருடைய அண்ணன் வாசீம்மை பொலிஸ் கைது செய்து
உள்ளது. ’குடும்ப
கெளரவத்தை
காக்கவே கொலைசெய்தேன்’
என ஒப்புதல்
வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பாகிஸ்தானில்
பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இவற்றை மீறுவோரை
குடும்பத்தினர் அல்லது உறவினர்களே கொலை செய்து
தண்டனை நிறைவேற்றுகின்றனர்.
அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் அங்கு
1,096 பெண்கள் கெளரவக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த
எண்ணிக்கை அங்கு
நாளுக்கு நாள்
பெருகிவரும் நிலையில், சமீபத்திய நிகழ்வாக பிரபல
நடிகை காண்டீல்
பலுச் (வயது
26) கெளரவக்கொலைக்கு ஆளாகி இருப்பது
பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
மாடலிங்
மற்றும் நடிப்புத்துறையில்
கால்பதித்து இருந்த காண்டீல் பலுச், தனது
கவர்ச்சிப்படங்களையும், வீடியோ பதிவுகளையும்
சமூக வலைத்தளங்களில்
பரவ விடுவதன்
மூலம் அடிக்கடி
செய்திகளில் அடிபட்டு வந்தார். அத்துடன் தனது
அதிரடி அறிவிப்புகளால்
பாகிஸ்தானியர் மட்டுமின்றி, இந்தியர்களின்
கவனத்தையும் ஈர்த்தார். கடந்த டி20 உலககோப்பை
கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவை பாகிஸ்தான்
அணி வென்றால்,
நிர்வாண நடனம்
ஆடப்போவதாக அறிவித்தார். இது அப்போது இரு
நாட்டு ரசிகர்கள்
மத்தியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சி
தலைவருமான இம்ரான்கானை
திருமணம் செய்வதற்கு
பலமுறை வெளிப்படையாக
விருப்பம் தெரிவித்து
இருந்தார். இப்போது சொந்த அண்ணனால் கழுத்தை
நெரித்து கொலை
செய்யப்பட்டு உள்ளார்.
கொலை
தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர். பொலிஸார் வாசீம்மை கைது செய்தனர்.
வாசீம் ’குடும்ப
கெளரவத்தை காக்கவே
கொலைசெய்தேன்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்து
உள்ளார். ”குவாண்டீல்
பலோச் தொடர்ந்து
குடும்ப கெளரவத்திற்கு
கலங்கத்தை ஏற்படுத்தி
வந்தார், இதனை
தொடர்ந்தும் என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. எனவே வெள்ளிக்கிழமை இரவு எல்லோரும்
தூங்க சென்றபோது
11 மணியளவில் கழுத்தை நெறித்து கொலை செய்தேன்.
என்னுடைய அண்ணனுக்கு
இதில் தொடர்பு
கிடையாது,” என்று வாசீம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment