சவூதி, ஏமன் நாடுகளில்
நாளை நோன்புப் பெருநாள்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக
நாடுகளில் நாளை 6ஆம் திகதி (புதன்கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமழான் நோன்பு
முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும்
ஈதுல் பித்ர்
எனப்படும் நோன்புப் பெருநாள் ஆண்டுதோறும் ஷவ்வால்
முதல் பிறை
தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த
(2016) ஆண்டின் ரமழான் நோன்பு
இன்றுடன் நிறைவடைவதால்
நேற்று (திங்கட்கிழமை)
ஷவ்வால் மாதத்தின்
முதல்பிறை மத்திய
கிழக்கு நாடுகளில்
தென்படும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய
தினம் பிறை
தோன்றவில்லை.
இதையடுத்து,
சவூதி அரேபியா,
கத்தார், பஹ்ரைன்,
குவைத் உள்ளிட்ட
ஐக்கிய அமீரக
நாடுகளில் நாளை
(புதன்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப்
பெருநாள் கொண்டாடப்படும் என மேற்கண்ட
நாடுகளின் ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.
ஏமன்,
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் நாளை
(புதன்கிழமை) நோன்புப் பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல்
அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை
தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்.
வழக்கமாக, சவூதி அரேபியா,
கத்தார், பஹ்ரைன்,
குவைத் உள்ளிட்ட
ஐக்கிய அமீரக
நாடுகளில் நோன்புப்
பெருநாள் கொண்டாடிய
மறுநாள்தான் இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்.
ஸ்ரீலங்காவில் (இலங்கை)
இன்று ஷவ்வால் முதல் பிறை தென்பட்டால் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று 5ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை கூடும் மார்க்க பெரியார்களின் முடிவுகளுக்கமைய நாளை 6ஆம் திகதி (புதன்கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும். நாட்டில் எப்பாகத்திலும் பிறை தென்படாவிட்டால் நாளை மறு
தினம் 7-ம் திகதியே (வியாழக்கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்.
0 comments:
Post a Comment