சீரற்ற மருந்துப் பாவனையும் சீரழியும் சுகவாழ்வும்



விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியின் பயனாக இன்;று உலகில் பல நவீன வைத்திய முறைகளும் புதிய மருந்து வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் பல்தேசிய மருந்துக் கம்பனிகள் பல யுக்திகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் மருந்துப் பாவனையை இன்றியமையாததாக்கிவிட்டனர். இதன் தாக்கமாக மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அற்ப நோய்க்கும்  உடனடியாக மருந்து பாவித்தலை வழமையாக்கிக் கொண்டுள்ளனர். சிறந்த சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பேணல், பொறுமை, நம்பிக்கை போன்ற நல் விழுமியங்களுடன் வாழுதல் என்பனவற்றிற்கு மாற்றீடாக இன்று மருந்துப் பாவனையே முக்கியமாகவுள்ளது.
எனவே இலங்கையில் மருந்து உற்பத்தி,இறக்குமதி, விநியோகம்,பாவனை தொடர்பான தேசிய கொள்கைகள் சரிவர அமுல் நடாத்தப்பட வேண்டும். அதன் மூலம் மருந்துப் பாவனையில் உள்ள குறைபாடுகள்; நீக்கப்பட வேண்டும்.
1960 களில் இலங்கையில் மருந்துப்பாவனையை சீராக்குவதற்கான ஆரம்ப முயற்சிகளை மேறகொண்டவர் பேராசிரியர் சேனக பிபிலே அவர்களாகும். இவரின் முயற்சியால் முதலில் 630 மருந்துகளின் பட்டியல்களுடன் 'இலங்கை வைத்தியசாலை மருந்துப் பட்டியல்களின் தொகுப்பு'(ஊநலடழn ர்ழளிவையட குழசஅரடயசல) வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 'தேசிய மருந்துப் பட்டியல் குழு' (யேவழையெட குழசஅரடயசல ஊழஅஅவைவநந) ஸ்தாபிக்கப்பட்டு 'PPPசநளஉசiடிநச' எனும் மருந்துகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய காலாண்டுக் கைநூல் வெளியீடும் ஆரம்பிக்கப்பட்டது.        
!970 களில் ஆட்சி செய்த ஐக்கிய முன்னணி அரசால் மருந்துப்பாவனைகளில் பொருத்தமான சீர்திருத்தங்களைக கொண்டு; வருவதற்காகனுச.ளு.யு.விக்ரமசிங்க னுச.சேனக பிபிலே ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் சிபரிசுகளை முழுமையாக அமுல் நடாத்த முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலும் னுச.சேனக பிபிலே அவர்களின் அகால மரணத்தினாலும் வேறு பல சக்திகளின் நிர்ப்பந்தங்களாலும் இம்முயற்சிகள் தடைப்பட்டன. எதிர்காலத்தில் மருந்துப்  பாவனை தொடர்பான தேசிய கொள்கைகளை சரிவர அமுல் நடாத்த வேண்டிய தேவை மிக அவசரமாக நோக்க வேண்டியள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (றுர்ழு) கணிப்பின் படி வைத்தியசாலைகளில் பரிந்துரைக்கப்படுகின்றதும் விநியோகிக்கப்படுகின்றதும் மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றதுமான மருந்துவகைகளில் அரைவாசிக்கு மேற்பட்டவை அவசியமற்றதாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ காணப்படுகின்றன. இவற்றைப் பெற்றுக்கொள்ளும் நோயாளிகள்pல் அரைவாசிப்பேர் தமது மருந்துகளைச் சரிவரப்பாவிப்பதுமில்லை. சரிவரப் பாவிப்பதில்லை என்பது அளவுக்கு அதிகமாகப் பாவித்தல்,குறைவாகப் பாவித்தல் அல்லது தப்பான தேவைகளுக்குப் பாவித்தல் என்பனவாகும்.
வளர்முக நாடுகளில் ஆரம்ப சுகாதார கவனிப்பு நிலையங்களில் மருத்துவ சிகிச்சை ஒழுங்குகளுக்கமைவாக மருந்துகள் பரிந்துரைக்கப்படும் விகிதாசாரம் அரச துறையில் 40மூக்கும் அரச சார்பற்ற நிலையங்களில் 30மூக்கும் குறைவாகவே காணப்படுகின்றன. உதாரணமாக: வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 60மூக்கு குறைவானவர்களுக்கு மட்டும் ழுசுளு கிடைக்கின்றது ஆயினும் 40மூ  க்;கு மேற்பட்டவர்களுக்கு அவசியமற்ற நோய்க் கிருமிகளைக்
கட்டுப்படுத்தும் மருந்துகள் (யுவெi டிழைவiகொடுபடுகின்றது. அதே போல் மலேரியா நோய் உள்ளவர்களில் 50மூ க்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட முன்னிலை மருந்துகள் கிடைக்கின்றன. மேலும், நியுமோனியா நோயினால் பாதிக்கப் பட்டவர்களில் 50-70மூ க்கு மட்டுமே பொருத்தமான நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுபடுகின்றது. ஆயினும் 60மூ க்கு மேற்பட்ட வைரஸ் நோய்க் கிருமிகளால் ஏற்படும் சுவாசக்குழாய் நோய்களுக்கு அவசியமற்ற நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் (யுவெi டிழைவiமருந்துகள் கிடைக்கின்றது.

தவறான மருந்துப் பாவனையின் பின் விளைவுகள்;
•         நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு (யுவெi டிழைவi) எதிர்ப்புச்சக்திகள் அதிகரிப்பதனால் இம் மருந்துகள் விரைவில் செயலாற்றல் இல்லாமல் போகின்றன. இதன் காரணமாக பல சத்திர சிகிச்சைகளும் புற்று நோய் சிகிச்சைகளும் தடைப்படுகின்றன. நோய் சுகமாகும் காலம் நீண்டு செல்வதால் வைத்தியசாலைகளில் தங்கும் காலம் அதிகரித்து செலவு கூடுகின்றது. அகால மரணங்கள் சம்பவிக்கின்றன.
•         .பிரதிகூலமான விளைவுகளால் ஏற்படும் ஒவ்வாமை(யுடடநசபல) பாரிய நோயாக மாறி மரணம் சம்பவிக்கலாம்
•         வீண் பண விரயம் (அரச மற்றும் தனி நபர்)
•         மருந்துகளின் வீண் விரயம் காரணமாக மருந்துத்தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும்.

தவறான மருந்துப் பாவனைக்கான காரணிகள்
•         நாட்;டில் சீரான மருந்துக் கொள்கை அமுல் நடாத்தப்படாமை
•         மருந்துகள் தொடர்பான உண்மைக்குப் புறம்பான விளம்பரங்கள் மூலம் பாவனையாளர் மனதில் ஏற்படும் தாக்கஙகள்
•         மருந்துகள் பட்டோலை இல்லாமல் தாராளமாக விற்கப்படுதல் மூலம் அவசியமற்றதும் பொருத்தமற்றதுமான மருந்துகளின் பாவனை அதிகம்.
•         மருந்துக் கம்பனி பிரதிநிதிகள் வைத்தியர்களுக்கும் மருந்து கையாள்பவர்களுக்கும் கொடுக்கும் ஒரு பக்க சார்பான தகவல்கள்,மேலதிக அனுகூலங்கள் மற்றும் நிர்ப்பந்திக்கும் செயற்பாடுகள்;
•         பொருளாதாரக் காரணிகளால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்குப் பதிலாக வேறு  விலை குறைந்த மருந்துகள் பாவித்தல்
•         மருந்துகள் தொடர்பாக சுதந்திரமான தகவல்கள் பெறுவதில் சிக்கல்கள்
•         மருத்துவ சிகிச்சை தொடர்பான சட்ட ஒழுங்குகள் பற்றிய தகவல்கள் இல்லாமை.
•         வைத்தியர்கள் மத்தியில் காணப்படும் பின்வரும் குறைபாடுகள்

   நோயைத் தீர்மானிப்பதில் நிச்சயமற்ற தன்மை
   நோயைக் கண்டுபிடிப்பதில உள்ள மாற்று முறைகள் பற்றிய போதிய தகவல்கள் இல்லாமை
   நோயாளியைத் தொடர்ச்சியாக கண்காணிக்கும் வாய்ப்பு இல்லாமை
   நோயாளிகளினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பான அச்சம்.
   வைத்தியர்கள் நோயளர்களுடன் அவசரமில்லாது கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்குவதற்கோ மருத்துவத் தகவல்களை நாளாந்தம் அறிந்து கொள்வதற்கோ தங்களின் வாழ்வொழுங்கை திட்டமிடாமை.
தீர்வுகள்
1.   மருந்து பாவனை தொடர்பான கொள்கைகளை அமுல் நடாத்துவதற்கும் அதன் விளைவுகளைக் கண்காணிக்வும் ஒரு தேசிய சபை ஸ்தாபித்தல்ஃபுனரமைத்தல்
2.   மருந்து தொடர்பான தீர்மானங்கள் எடுப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் பயிற்சிகள் அளிப்பதற்கும் சான்றுகளுடன் கூடிய சிகிச்சை வழிகாட்டிகளைத் தயாரித்து வெளியிடல்.
3.   அத்தியாவசிய மருந்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு காலத்திற்கு காலம் புதுப்பித்தல்.
4.   மாவட்டம் தோறும் மருந்துப் பாவனையை கண்காணிக்வும் முன்னேற்றவும் சிகிச்சைக் குழுக்கள ஏற்படுத்தல்;.
5.   வைத்தியப் பட்டதாரிப் பயிற்சியில் மருந்துகள் பரிந்துரை செய்தல் மற்றும் மருந்துகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (றுர்ழு)
6.   வைத்தியத் தொழில் செய்வதற்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கு தொடர்ச்சியான மருத்துவக் கல்வியில் (ஊஆநு) தேர்ச்சி பெறுவதை நிபந்தனையாக்கல் (றுர்ழு)
7.   மருத்துவப் பணியாளரும் நுகர்வோரும் பார்வையிடக் கூடியவாறு மருந்துகள் தொடர்பான சுதந்திரமானதும் பக்கசார்பற்றதுமான தகவல்கள் பகிரஙகமாக கிடைத்தல.;
8.   மருந்துகள் தொடர்பாக மருத்துவப் பணியாளருக்கும் பொது மக்களுக்கும் சுதந்திரமானதும் பக்கசார்பற்றதுமான அறிவூட்டல்கள் செய்தல்.
9.   முறைகேடாக மருந்துகள் பரிந்துரை செய்வதைத் தூண்டும் பொருளாதார அல்லது வேறு அனுகூலங்களை வழங்கும் செயற்பாடுகளை இல்லாதொழிக்க சட்ட ஒழுங்குகள் ஏற்படுத்தல்
10.  தரம் வாய்ந்த மருந்துகளினதும் பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்களினதும்; தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்தல்.
11.  வெளிநோயளர் சிகிச்சைக்கு வருபவர்களின் தகவல்கள் கணனிகளில் பதியப்பட்டு; அவர்களுக்கான சிகிச்சையை தொடர்ச்சியாகக் கண்கணிக்கும் முறை நடைமுறைப்படுத்தல்
12.  பெரும்பாலான வெளி நோயாளர் சிகிச்சை நிலையங்களில் வைத்தியரின் கட்டணங்கள் நோயாளிக்கு வழங்கப்படும் மருந்துகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வைத்தியரின் கட்டணங்களை வேறு வகையில் செலுத்துவது மூலம் அவசியமற்ற மருந்துகள் பரிந்துரை செய்யப்படுவதைக் குறைத்தல்
13.  .நோயாளிக்குத தரப்படும் மருந்துவகைகளைக் குறைந்தது 03 தினங்களாவது பாவித்த பின்பே மீள் பரிசோதனைக்கு செல்லல்.(ஆயினும் புதிய சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்).
14.  ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தை மற்றவர்கள் பாவித்தலைத் தவிர்த்தல்
15.  மருத்துவ ஆலோசனையின்றி தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்வதையோ ஆய்வுகூட வைத்திய பரிசோதனைகளைச் செய்வதையோ தவிர்த்தல்.
மேற் கூறப்பட்ட தீhவுகளை அமுல் நடத்ததுவற்கு அரசும் அதிகாரிகளும், பொது மக்களும் ஆவன செய்ய வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான சரியான மருந்தை சரியான அளவில் தேவையான காலத்திற்கு அதி குறைந்த விலைக்குப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
அத்துடன் மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டவுடன் மருந்து உடகொள்வதை நாடாமல் பொறுமையுடனும் நம்பிக்கையடனும் ஓய்வு எடுத்து நல்ல சுகாதார,உணவு பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவும் வைத்திய ஆலோசனையின்றி மருந்து பாவித்தலைத்தடுக்கவும் அறிவூட்டல்கள் நடாத்தப்பட வேண்டும்.-
டாக்டர் எம்..எம் ஜெமீல்
தலைவர்,மாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவை (அம்பாரை மாவட்டம்)
தலைவர்,சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியம், சாய்ந்தமருது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top