தற்கொலை படையினர் இஸ்லாமியர்கள் அல்ல ;
டாக்டர் ஜாகீர் நாயக் மதீனாவில் இருந்து
ஸ்கைப் மூலம்
பேட்டி
நான்
அமைதியை மட்டுமே
வலியுறுத்தி வருகிறேன் என்றும், பயங்கரவாதத்தை நான்
ஊக்குவிக்கவில்லை என்றும் மும்பையை சேர்ந்த பிரபல
இஸ்லாமிய பிரசாரகர்
டாக்டர் ஜாகீர் நாயக்
ஸ்கைப் மூலம்
அளித்த பேட்டியில்
கூறியுள்ளார்.
மதீனாவில்
இருந்து இவர்
மீடியாக்களுக்கு ஸ்கைப் மூலம் பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியில்
அவர் கூறியதாவது:
நான்
எப்போதும் அமைதியை
பரப்பி வருபவன்.
யாரையும் பயங்கரவாதத்திற்கு
தூண்டுவதில்லை. மீடியாக்கள் என்னை பற்றி தவறாக
திரித்து செய்தி
பரப்பி வருகிறது.
நான் எப்போதும்
பயங்கரவாதத்தை ஏற்று கொள்வதில்லை. பயங்கரவாதிகள், தற்கொலை
படையினர் அப்பாவி
மக்களை கொல்கின்றனர்.
இவர்கள் இஸ்லாமியர்கள்
அல்ல. இளைஞர்களை
சிலர் தவறான
வழி நடத்துகின்றனர்.
உலகம்
முழுவதும் எங்கு
பயங்கரவாதம் நடந்தாலும் நான் கண்டிப்பேன். என்னுடைய
போதனையை நிறுத்த
மாட்டேன். பீஸ்
டிவியை தடை
செய்வதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இஸ்லாமியர்கள்
நடத்தும் சேனலை
சிலர் குறி
வைத்து நெருக்கடி
கொடுக்கின்றனர். இவ்வாறு அவர்
கூறினார்.
சமீபத்தில்
வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட
ஒருவர் ஜாகீர்
நாயக் பேச்சு
மூலம் தான்
பயங்கரவாதியாக மாறியதாக கூறியிருந்தான். மேலும் கேரளாவில்
இருந்து மாயமான
சிலர் இவரை
சந்தித்து ஐ.எஸ்.,சில்
சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய
அமைச்சகம் விசாரித்து
வருகிறது.
டாக்டர்
ஜாகீர் தற்போது சவூதி அரேபியாவில் இருந்து
வருகிறார். அங்கிருந்து ஸ்கைப் மூலம் அவர்
மீடியாக்களிடம் பேசினார்.
0 comments:
Post a Comment