தமிழக முதல்வர் ஜெயலலிதா மேலும் 10 நாட்களுக்குப் பிறகே

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்

அப்போலோ மருத்துவமனைசெய்திகள் தெரிவிப்பு

அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துவிட்டன. 'கடந்த நான்கு நாட்களாக நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கிறது!’ என அப்போலோ வட்டாரத்தில்உற்சாகம் தெரிவிக்கப்படுகின்றது என அறிவிக்கப்படுகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 22-ம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று காரணமாக, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் லண்டனைச் சேர்ந்த செயிண்ட் தாமஸ் மருத்துமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவை இந்தியா வரவழைத்தனர். கடந்த மாதம் 30-ம் திகதி மருத்துவர் ரிச்சர்ட் ஜெயலலிதாவை பரிசோதித்துச் சென்றார். தொடர்ந்து ரிச்சர்ட் வழிகாட்டுதலின்பேரில், மருத்துவர் சிவக்குமார் சிகிச்சைகளை மேற்கொள்கிறார். நுரையீரலில் தங்கியுள்ள நீரின் மூலம் ஏற்பட்டுள்ள தொற்றை சரிசெய்வதற்கான அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து, தொற்றை குணப்படுத்துதற்கான சிகிச்சைகள் வேகமெடுத்தன.

’’நேற்று காலையில் .பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வர் தங்கியிருக்கும் வார்டுக்கு வெளியில் இருந்து அவரைப் பார்த்தனர். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை முதல்வர் கண்திறந்து பார்க்கிறார். மருத்துவர் ரிச்சர்டு வருவதற்கு முன்புவரையில், தொடர் மருந்துகளின் விளைவால் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். தற்போது அந்த சிரமங்கள் குறைந்திருக்கிறது!’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கிய கார்டன் ஊழியர் ஒருவர், "முதல்வருக்கு உணவாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, வாய்வழியாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வலியால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். வெளிப்புறத்தில் இருந்து வருபவர்களால், எந்தவிதமான நோய்த் தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெடிக்கல் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் உள்ள கண்ணாடி சூழ்ந்த அறையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த அறைக்குள் மருத்துவர் உள்பட மருத்துவ பணியாளர்கள் அனைவரும், மருத்துவமனை அளிக்கும் ஆடையையே அணிந்து செல்ல வேண்டும்.

இதனால் சில முக்கிய வி..பிக்களால் முதல்வரை நேரடியாக சந்திக்க முடியவில்லை. முதல்வர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சி.சி.யூ வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 பேரும், வேறு வார்டுகளுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது அவர்களில் 20 பேர் சி.சி.யூ வார்டுக்குத் திரும்பிவிட்டனர். முதல்வருக்கு பணிவிடை செய்யும் நர்சுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன. அதேவேளையில், மருத்துவமனையில் இருந்து செல்லும் அனைத்து செல்போன் கால்களும் ட்ரேஸ் செய்யப்படுகின்றன. முதல்வர் தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் யார் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்" என விவரித்தார்.


"தீவிர சிகிச்சையின் காரணமாக, முதல்வர் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதுவரையில், மருத்துவர் ரிச்சர்ட்டின் கண்காணிப்பில் முதல்வர் இருப்பார். 10 நாட்களுக்குப் பிறகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார்"  அப்போலோ மருத்துவமனை  செய்திகள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top