2016ம்
ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு
ஜப்பானின்
யோஷினேரி ஒஸ்மிக்கு
2016ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்
ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. விருது, ஜப்பானை
சேர்ந்த பேராசிரியர்
யோஷினேரி ஒஸ்மிக்கு
வழங்கப்பட்டுள்ளது. உடல் செல்கள்
தம்மை தாமே
அழித்து கொள்வது
பற்றிய ஆட்டோபேஜி
என்ற ஆய்வு
மேற்கொண்டதற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. டோக்கியோ பல்கலையில் செல்லியல் துறை
பேராசிரியரான ஒஸ்மி, ஆட்டோபேஜி எனப்படும் செல்லியல்
பிரிவு நிபுணர்
ஆவார்.
நாளை
இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள்
வேதியியலுக்கான நோபல் பரிசும், அமைதிக்கான நோபல்
பரிசும் 7 ம்
திகதியும்,
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
வரும் 10ம்
திகதியும் வழங்கப்படுகிறது.
கடந்த
ஆண்டு மருத்துவத்துக்கான
நோபல் பரிசு
மூன்று விஞ்ஞானிகளுக்கு
பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மலேரியா மற்றும்
வெப்பமண்டல நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சை முறைகளை
கண்டுபிடித்தமைக்காக இந்த விருது
வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment