அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி
மிச்செல் ஒபாமாவை கொரில்லா என வசைபாடிய ஆசிரியை!

இனவாதம் மற்றும் பாரபட்சத்தை தங்கள் பாடசாலை ஏற்றுக்கொள்ளாது என 

குறிப்பிட்ட நிர்வாகம் வேலையில் இருந்து அவரை நீக்கியுள்ளது

அமெரிக்காவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மிச்செல் ஒபாமாவை கொரில்லா என குறிப்பிட்டு வசைபாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் குறிப்பிட்ட அந்த ஆசிரியரை இனவெறியுடன் கருத்து வெளியிட்டதாக கூறி வேலையில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்தே ஜேன் வூட் அல்லன் குறிப்பிட்ட பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மிச்செல் ஒபாமாவை கொரில்லா என்று குறிப்பிட்டு வசைபாடியுள்ளார்.

குறிப்பிட்ட பதிவை அவர் நீக்கியிருந்தாலும், அந்த பதிவை நகல் எடுத்துக்கொண்ட இணையவாசிகள் அதை வைரலாக்கியுள்ளனர். இந்த விவகாரம் குறிப்பிட்ட பாடசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு எட்டியதை அடுத்து, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இனவாதம் மற்றும் பாரபட்சத்தை ஒருபோதும் தங்கள் பாடசாலை ஏற்றுக்கொள்ளாது என குறிப்பிட்ட நிர்வாகம் இது பாடசாலையின் எஞ்சியவர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என எச்சரித்துள்ளது.

ஆசிரியர் ஜேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள கருத்துகள் பெரும்பாலும் இனவாதம் மற்றும் பாரபட்சமானது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அவரது கருத்துகளை குறிப்பிட்ட இணையவாசிகள் கடந்த 27 ஆண்டுகளாக இவர் எத்தனை ஆயிரம் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்திருப்பார் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top