முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
முஸ்லிம்களுடன் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் முஸ்லிம்கள் சிலருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று 5 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் சமூகத்தினர் கலந்துகொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கையை தன் பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பினை மஹிந்த தரப்பினர் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் ஆட்சியை வீழ்த்தி மைத்திரி, ரணில் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் பிரதான பங்கினை வகித்தனர். மஹிந்தவின் ஆட்சியில் அரங்கேறிய இனவாதம் ஆட்சி மாற்றம் ஒன்றின் தேவையை சிறுபான்மைக்கு உணர்த்தியது.
முஸ்லிம்களின் மத அடையாளங்கள் திட்டமிட்டு கேவலப்படுத்தப்பட்டமை, வர்த்தகரீதியில் ஓரங்கட்டப்பட்டமை போன்ற விடையங்கள் மஹிந்த ஆட்சியின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டதாக கருத்துக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றின் பிரதிபலனாகவே ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் சிறுபான்மை மக்கள் தமது தீர்ப்பை கடந்த ஆட்சிக்கு எதிராக வழங்கினர்.

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் கட்டவிழ்க்கப்படக்கூடும் என்ற அச்சம் இன்னமும் அவர்களிடம் காணப்படுகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .


















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top