அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர்..!




முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 14 நாட்கள் ஆகிறது. அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு சுவாச உதவிக்காக வென்டிலேட்டர் பொருத்தியிருக்கிறார்கள். அதன் உதவியுடன்தான் சுவாசித்து வருகிறார் ஜெயலலிதா. அக்டோபர் 3-ம் திகதியன்று அப்போலோ ஆஸ்பத்திரி தரப்பில்  வெளியிட்ட ஜெயலலிதாவின் மருத்துவ ரிப்போர்ட்டில், முதன்முதலாக ஒரு விஷயத்தை அறிவித்தது. ஜெயலலிதாவின் உடலுக்கு தேவையான சுவாச உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
அதாவது, வென்டிலேட்டர் போன்ற உபகரணங்களை கொண்டு செயற்கை சுவாச உதவி (respiratory support)  வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர். ஏன் இந்த வென்டிலேட்டர்? என்று பிரபல மருத்துவர் ஒருவரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,


நுரையீரலில் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு. 

பொதுவாகவே, மனித உடல் இயங்குவதற்கு தேவையான ஆக்ஸிஜனை பிரித்து அனுப்புவதுதான் நுரையீரல் வேலை. அதிலுள்ள தேன்கூடு போன்ற பைகள் சீராக செயல்பட்டால்தான், ரத்தம் சுத்திகரிக்கப்படும். இந்த செயல்பாட்டில் ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கு 'Alveoli '  என்று சொல்லுவோம். சளிப் பிரச்னை, கிருமி தொற்று ஆகியவற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். இந்தவகையில், ஜெயலலிதா சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இது எப்போது விலக்குவார்கள் என்று சொல்ல முடியாது. அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுப்பார்கள். எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், சுவாசம் வழக்கம்போல் இயங்கத்துவங்கிவிடும்" என்றார்.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top