பிராந்திய அமைதி சீர்குலைந்ததற்கு
காஷ்மீர் பிரச்சனைதான் முக்கிய காரணம்:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
பிராந்தியத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டதற்கு காஷ்மீர் பிரச்சினைதான்
முக்கிய காரணம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அசர்பைஜான் நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு முக்கிய காரணம் காஷ்மீர் பிரச்சினைதான். இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அளித்த வாக்குறுதியை மதித்து இந்தியா நடக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் உரி ராணுவ முகாம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. தாக்குதல் நடந்த 6 மணி நேரத்திற்குள் இந்தியா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவலே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment