நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் கடமையாற்றும்
ஆசிரியர்களின் எண்ணிக்கையும்
அவர்களின் கல்வித் தகைமைகளும்
எமது
இலங்கை நாட்டில்
அரச பாடசாலைகளில்
மொத்தமாக 2 இலட்சத்து 36 ஆயிரத்து
998 ஆசிரியர்கள் மாணவர்களின்
கல்வி போதனைகளுக்காக
நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் இறுதியாக
வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி
விபரம் தெரிவிக்கின்றது.
இவர்களில் 64
ஆயிரது 462 பேர் (27%) ஆண்களாகவும் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 536 பேர் (73%) பெண்களாகவும் உள்ளனர்.
மொத்த
ஆசிரியர்களில் 99 ஆயிரத்து 004
பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும்
1 இலட்சத்து 32 ஆயிரத்து 952 பேர்
பயிற்றப்பட ஆசிரியர்களாகவும் 2 ஆயிரத்து 873 பேர் பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் 2 ஆயிரது 169
பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த
ஆசிரியர்களில் 50 பேர் Ph.D. கல்வித் தரத்திலும் 186 பேர்
M.Phil கல்வித் தரத்திலும் 4725 பேர் MA/M.Sc/M.Ed கல்வித் தரங்களிலும் 107,301பேர் BA/B.Sc/B.Ed கல்வித் தரங்களிலும்
117,708 பேர் G.C.E.A/L கல்வித்
தரத்திலும் 6957 பேர் G.C.E.O/L கல்வித்
தரத்திலும் 71 பேர் Less than G.C.E.(O/L) கல்வித்
தரத்தில் உள்ளனர்.
மாணவர்களின்
கல்வி போதனைகளுக்காக
நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 325 பேர்
ஏனைய நடவடிக்கைகளுக்காக
(Released to a Office) விடுவிக்கப்பட்டுள்ளனர். 65 பேர் (On Study Leave) கற்பதற்கான விடுமுறையில் இருக்கின்றனர்.
மொத்த
ஆசிரியர்களில் 59,223 பேர்
தமிழ் மொழி
மூலமும் 4,954 பேர் ஆங்கில மொழி
மூலமும் 172,821 பேர் சிங்கள
மொழி மூலமும்
கல்வி போதனையில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்த
ஆசிரியர்களில் 04 பேர் 21 வயதிற்குள்ளும் 24,277 பேர்
21 – 30 வயதிலும் 69,186 பேர் 31-
40 வயதிலும் 73686 பேர்
41 – 50 வயதிலும் 41723 பேர் 51 – 55 வயதிலும்
26364 பேர் 56 – 60 வயதிலும் 1758 பேர்
60 வயதுக்கு மேலும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களில்
7592 பேர் அதிபர்களாகவும்
2541பேர்
பதில் அதிபர்களாகவும் 5120 பேர் பிரதி அதிபர்களாகவும்
1160 பேர் பதில்
பிரதி அதிபர்களாகவும்
1845 பேர் உதவி
அதிபர்களாகவும் 339 பேர் பதில் உதவி அதிபர்களாகவும் 19935 பேர் பகுதித்
தலைவர்களாகவும் 198,466 பேர் ஆசிரியர்களாகவும் பாடசாலைகளில் கடமையாற்றுகின்றனர்.
இந்த ஆசிரியர்களில் 120 பேர் SLEAS I சேவையிலும் 64
பேர் SLEAS II சேவையிலும் 313 பேர் SLEAS III சேவையிலும் 1858 பேர் SLPS 1 சேவையிலும் SLPS 2452 பேர் 2_I
சேவையிலும் 3273 பேர் SLPS 2_II சேவையிலும் 2272 பேர் SLPS 3 சேவையிலும் 46,615 பேர் SLTS I சேவையிலும் 39,369 பேர் SLTS 2_I சேவையிலும் 59,427
பேர் SLTS 2_II சேவையிலும் 72,629 பேர் SLTS 3_I சேவையிலும் 5979 பேர் SLTS 3_II சேவையிலும் 2627 பேர் Not absorbed
to SLTS சேவையிலும் உள்ளனர்.
0 comments:
Post a Comment