தற்கொலைப்படை தாக்குதல்:
31 பேர் பலி 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற 'கர்பலா' போரில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரரான இமாம் ஹுஸைன்(ரலி)
அவர்கள் கொல்லப்பட்ட துக்கநாளான 'ஆஷூரா' தினத்தை அனுசரிப்பதற்காக பாக்தாத் நகரில் உள்ள ஷியா பிரிவு மக்கள், அல்-ஷபாப் மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் ஒன்று கூடினர். அங்கு ஒரு கூடாரம் அமைத்து துக்கநாள் தொடர்பான நிகழ்வுகளில் ஈடுபட்டபோது, கூட்டத்துக்குள் இருந்த பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.
இந்த தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
0 comments:
Post a Comment