சொக்லெட் தயாரித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பெல்ஜியத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் Laurent Gerbaud என்ற சொக்லெட் தயாரிப்பு தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
                                                                                                                                                                    
பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரிப்புக்கான அவசியமான பிரதான மூலப்பொருட்கள் இல்லாத போதிலும், 17ஆம் நூற்றாண்டில் இருந்து சொக்லெட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடாக பெல்ஜியம் காணப்படுகின்றது.

தற்போது பெல்ஜியம் சொக்லெட் தயாரிப்புக்கு புதியதொரு பரிமாணத்தை சேர்த்துக் கொண்டு, பல்வேறு ஆக்கத்திறன் கொண்ட சொக்லெட் தயாரிக்கும் நிறுவனமாக Laurent Gerbaud பிரபலமடைந்துள்ளது.
தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவினரை நிறுவன உரிமையாளர் Laurent Gerbaud வரவேற்றார்.

இதன்போது தமது நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியிட்ட Laurent , நறுமண பொருட்களை பயன்படுத்தி சுவையாக்கப்படும் சொக்லெட் தயாரிப்பு தொடர்பிலும் தெளிவுப்படுத்தியுள்ளார்
அவ்வாறான சொக்லெட் தயாரிக்கும் முறையை சுட்டிக்காட்டியவர், பிரதமரை சொக்லெட் தயாரிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் பிரதமரும் அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்லெட் செய்வதற்கு இணைந்தவுடன் அங்கிருந்த அனைவவருக்கும் அது சிறந்த அனுபவமாக காணப்பட்டதென பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரினால் தயாரிக்கப்பட்ட சொக்லெட் அங்கிருந்த அனைவருக்கும் சுவைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அதில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொள்வதற்கு பிரதமர் மறக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top