புதிய நீதிமன்றத் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
நீதிமன்றங்களுக்காக
உள்ள கட்டடங்கள்
மிகப் பழமையானவையாக
இருத்தல், சனத்தொகையின்
அதிகரிப்புக்கு ஏற்ப வழக்குகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு,
நீதிமன்றக் கட்டடங்களின் இடவசதிகள் போதுமானதாக இல்லாமை
போன்ற பல்வேறு
காரணங்களினால் புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான
தேவை எழுந்துள்ளது.
அதனடிப்படையில்,
கம்பளை, ருவன்வெல்ல,
மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் காணப்படுகின்ற
நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு
முன்னுரிமை பெற்றுக் கொடுத்து புதிய நீதிமன்றத்
கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில் நீதியமைச்சர் கலாநிதி
விஜயதாச ராஜபக்ஸ
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment