2016/17 பெரும்போகத்தில் வரட்சி காரணமாக

அனர்த்தத்திற்குள்ளாகிய கமக்காரக் குடும்பங்களுக்கு

நிவாரணம் வழங்குவதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்



2016/17 பெரும்போகத்தில் வரட்சி காரணமாக அனர்த்தத்திற்குள்ளாகிய கமக்காரக் குடும்பங்களுக்கும் மற்றும் வரட்சியினால் நெற்பயிர் செய்கையில் ஈடுபடாத குடும்பங்களுக்கும், வரட்சி காரணமாக பிற பயிர் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் ஒரு குடும்பத்துக்கு 10,000 ரூபா அடிப்படையில் விசேட நிதி நிவாரணமொன்றை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்காக வழங்குவதற்கும்,

குறித்த தொகையினை தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்பதாக அனைத்து கமக்காரக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் மற்றும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோல் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top