இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக 'விருசுமிதுரு'
வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த படைவீரர்களின் வீடமைப்புச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் நோக்கில் போதியளவு நிதியினை ஒதுக்கி அதன் மூலம் 3,650 வீட்டு அலகுகளை 04 வருடங்களுக்குள் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 1,950 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதுடன், இராணுவ வீரர்களுக்காக பாதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள 1,700 வீட்டு அலகுகளை பூரணப்படுத்தி கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பலனாளிகள் ரணவிரு சேவைகள் அதிகார சபையினால் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் புதிய வீட்டு அலகொன்றுக்காக 1.2 மில்லியன் ரூபாய்களும், பாதியளவு வீடொன்றுக்காக 500,000 ரூபாய்கள் மதிப்புள்ள கட்டிட நிர்மாண பொருட்களும் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளன. அதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை 2017-2020 கால எல்லைக்குள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவைகள் அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து செயற்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment