கேகாலை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட
பொது மக்களுக்காக தொடர்ந்தும் நிவாரணம் வழங்கலுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
2016ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட அதிக மழையுடன் காலநிலையினால் கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவினை தொடர்ந்து, 1,682 வீடுகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடன் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு சிபார்சு செய்திருந்தது.
குறித்த மக்களை மீள குடியமர்த்த நிதி ஒதுக்கிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. பின்னர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், இவ்வவதானம் நிறைந்த வீடுகளின் தொகை 1,941 ஆக அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் புதிதாக இனங்காணப்பட்ட 259 வீடுகளை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமரத்துவதற்காக காணிகள் மற்றும் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேலதிக திறைசேரி நிதியினை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment