நாடாளவிய ரீதியில்
2494 பேர்
இலங்கை நிருவாக சேவையில்
(அஸ்லம்)
நாடாளவிய
ரீதியில் இலங்கை
நிருவாக சேவையின்
சகல தரங்களிலும்
2494 பேர் சேவையில்
உள்ளதாக பொது
நிருவாக அமைச்சின்
இலங்கை நிருவாக
சேவை பிரிவின்
பணிப்பாளர் துஷாரி பத்திரண தெரிவித்தார்.
தற்போது
இச்சேவையின் விசேட தரத்தில் 389 பேரும், முதலாம்
தரத்தில் 581 பேரும், இரண்டாம் தரத்தில் 203 பேரும்,
மூன்றாம் தரத்தில்
1321 பேரும் கடமையில் உள்ளனர். இவர்கள் அனைவரும்
மத்திய, மாகாண
அரச சேவைகளில்
உள்ளனர்.
இதேவேளை
மாகாண சபை
மட்டத்தில் விசேட தரத்தில் 06 பேரும், முதலாம் தரத்தில்
15 பேரும், இரண்டாம், மூன்றாம் தரங்களில் 167 பேருமாக
188 பேருக்கு வெற்றிடம் காணப்படுகிறது.
முதலாம்
தரப்பதவியான பிரதேச செயலாளர் பதவிக்கு 165 வெற்றிடங்கள்
காணப்படும் அதேவேளை உதவி பிரதேச செயலாளர்
பதவியில் 65 பேர் மேலதிகமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பிரதேச செயலகங்களில்
உள்ள முதலாம்
தரப்பதவிகளை இலங்கை நிருவாக சேவையின் இரண்டாம்,
மூன்றாம் தரங்களைச்
சேர்ந்த 125 பேர் தற்காலிக அடிப்படையில் வகித்து
வருகின்றனர்.
இலங்கை
நிருவாக சேவை
பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் போது சேவைமூப்பு
மற்றும் அனுபவம்
என்பன முக்கியமாக
கருத்தில் கொள்ளப்படுவதாக
துஷாரி பத்திரண
மேலும் தெரிவித்தார்.
இலங்கை நிருவாக
சேவையிலுள்ள சகல உத்தியோகத்தர்களது விபரங்களும் பொது
நிருவாக அமைச்சின்
இணையத்தளத்தில் உள்ளதுடன் கிரமமான முறையில் அவை
இற்றைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை
இவ்வமைச்சின் கீழுள்ள இலங்கை கணக்காளர் சேவை,
இலங்கை பொறியியலாளர்
சேழைவ, இலங்கை
விஞ்ஞான சேவை,
இலங்கை திட்டமிடல்
சேவை உள்ளிட்ட
சுமார் ஆறுக்கு
மேற்பட்ட அகில
இலங்கை சேவைகள்
தொடர்பான விடயங்கள்
பொது நிருவாக
அமைச்சின் இணையதளத்தில்
பூரணமற்ற நிலையில்
காணப்படுகின்றன. இதன் காரணமாக இச்சேவைகளில் உள்ளோர்
அதிருப்தியான நிலையில் காணப்படுகின்றனர்.
அகில
இலங்கை சேவைகள்
ஒன்றுக்கொன்று சமாந்தரமானவை எனக்கூறப்படுகின்ற
போதிலும் இலங்கை
நிருவாக சேவைக்கு
வழங்கப்படும் முக்கியத்துவம் ஏனைய சேவைகளுக்கு வழங்கப்படுவதில்லையென்ற
விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment