அரச சேவை ஆணைக்குழுவால் மாகாண சபைகளுக்கு
கையளிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை
நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை வாபஸ்
(அஸ்லம்)
இலங்கை
கல்வி நிருவாக
சேவை உத்தியோகத்தர்களின்
நிருவாக பணிகளை
மாகாண சபைகளுக்கு
ஒப்படைத்தல் தொடர்பாக அரச சேவைகள் ஆணைக்குழுவினால்
2003ம் ஆண்டு
வெளியிடப்பட்ட 04/2003ம் இலக்க
சுற்றுநிரூபம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழுவின்
செயலாளர் எச்.எம்.காமினி
செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை
கல்வி நிருவாக
சேவைக்கான புதிய
சேவை பிரமாணக்குறிப்பு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையாலும், அரச சேவைகள்
ஆணைக்குழுவின் கல்விச்சேவைக்குழு என்பன மீளவும் இயங்க
ஆரம்பித்துள்ளமையாலும் மேற்படி சுற்றுநிரூபம்
மீளப் பெறப்பட்டுள்ளதாக
அவர் மேலும்
அறிவித்துள்ளார்.
இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
கிழக்கு மாகாண
சங்கம் கிழக்கு
மாகாணத்தில் இடம்பெற்று வரும் முறைகேடான வலயக்கல்விப்
பணிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றில்
தொடர்ந்த வழக்கொன்றிற்கு
பதிலளிக்கும் போதே மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்
என மேற்படி
சங்கச் செயலாளர்
ஏ.எல்.எம்.முக்தார்
அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment