சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலைக்கு
நான்கு வருடமாக நிரந்தர அதிபரில்லை
(அபூ முஜாஹித்)
சம்மாந்துறை
முஸ்லிம் மகா
வித்தியாலய தேசிய பாடசாலைககு கடந்த நான்கு
வருடகாலமாக நிரந்தர அதிபர் நியமிக்கப்படவில்லை எனவும் உடனடியாக இப்பாடசாலைக்கு நிரந்தர
அதிபர் ஒருவரை
நியமனம் செய்யுமாறும்
தென்கிழக்கு கல்விப் பேரவை அரச சேவைகள்
ஆணைக்குழுவிடமும், கல்வி அமைச்சிடமும்
கோரிக்கை விடுத்துள்ளதாக
மேற்படி பேரவையின்
செயலாளர் எம்.எம்.சயீல்
தெரிவித்தார்.
இது
தொடர்பாக அவர்
அனுப்பி வைத்துள்ள
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சம்மாந்துறை
முஸ்லிம் தேசிய
பாடசாலை என்பது
சம்மாந்துறையிலுள்ள ஒரேயொரு தேசிய
பாடசாலையாகும். இப்பாடசாலை 2500 மாணவர்களும்
125ற்கு மேற்பட்ட
ஆசிரியர்களையும் கொண்டது. இக்கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய
இலங்கை கல்வி
நிருவாக சேவையைச்
சேர்ந்தவர் கடந்த 2013ல் ஓய்வு பெற்றுச்
சென்ற பின்னர்
நிரந்தர அதிபரின்றி
இயங்கி வருகிறது.
தற்போது
இப்பாடசாலையில் மாகாணப்பாடசாலையொன்றில் கடமையாற்றிய
அதிபர் ஒருவரை
தற்காலிகமாக கல்வியமைச்சு நியமித்துள்ளது.
இவரது சம்பளம்
வேறு ஒரு
மாகாணப்பாடசாலையின் ஊடாக வழங்கப்பட்டு
வருகிறது. மாகாண
சபையில் சம்பளம்
பெறும் ஒருவர்
மத்திய அரசில்
கடமை செய்ய
முடியாது. அத்துடன்
தேசிய பாடசாலை
சம்பளப் பத்திரத்தில் பெயர் இடம்பெறாதவர்
தேசிய பாடசாலை
அதிபராக கடமைபுரிய
முடியாது என
கணக்காய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே,
தற்போது தற்காலிகமாக
கடமைபுரியும் அதிபரை நிரந்தரமாக்க வேண்டும் இல்லையெனில்
நிரந்தர அதிபரை
நியமிக்க வேண்டுமென
மேற்படி பேரவை
கோரியுள்ளது.
0 comments:
Post a Comment