மன்னார் க்றிட் உப மின்னிலையத்தின்
நிர்மாணப் பணிகளது விடயப் பரப்பை திருத்துதலுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற தூய சக்தி மற்றும் மின்சார வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் மன்னார் க்றிட் உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தமானது 2014ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.
குறித்த உப மின்னிலையத்தின் சக்திக் கொள்திறனானது அது ஆரம்பிக்கப்பட்ட உடன் 132kV இலிருந்து 220 kV ஆக அதிகரிப்பதாக இனங்காணப்பட்டது. அதனால் மாறுபடும் விடயப் பரப்பை மேற்கொள்வதற்காக புதிதாக நிதிப் பிரேரணைகள் கோரப்பட்டன.
அதனடிப்படையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பிரதிபலனாக குறித்த மேலதிக ஒப்பந்தத்தை தற்போது ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரருக்கே வழங்குவது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment