நாடாளவிய ரீதியில் பல்வேறு காய்ச்சல் பரவி வருவதனால்
கிழக்கு மாகாணப்பாடசாலை மாணவர்களுக்கான
கல்விச்சுற்றுலாவிற்கு அனுமதி வழங்க வேண்டாம்
கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை
(அஸ்லம்)
தற்போது
நாடாளவிய ரீதியில்
டெங்கு மற்றும்
வைரஸ் காய்ச்சல்
என்பன பரவலாக
மக்களை தாக்கி
வருவதனால் கிழக்கு
மாகாணப் பாடசாலைகளில்
இருந்து கல்விச்
சுற்றுலாவிற்காக மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதி
வழங்க வேண்டாமென
கிழக்கு மாகாணக்கல்விப்
பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது
தொடர்பான அவசர
கோரிக்கையை இலங்கை கல்வி நிருவாக சேவை
அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விடுத்துள்ளது.
இது தொடர்பாக
மேற்படி சங்கத்தினால்
அனுப்பி வைக்கப்பட்டுள்ள
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தற்போதைய
கடுமையான உஸ்ணம்,
வரட்சி என்பன
காரணமாக நாடாளவிய
ரீதியில் பல்வேறு
நோய்ககள் ஏற்பட்டு
வருவதுடன் குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. சிறுவர் முதல் பெரியோர் வரை
டெங்கு வைரஸ்,
இன்புளுவென்ஸா காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டமும் ஏற்பட்டு
வருகிறது. இதன்
காரணமாக பேராதனை
பல்கலைக்கழகம் உட்பட பல நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில்
கிழக்கு மாகாணத்தைச்
சேர்ந்த பாடசாலைகள்
கல்விச்சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து
மாணவர்களை அழைத்துச்செல்ல
ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கான அனுமதியினை
தற்போதைய சூழ்நிலையில்
வழங்குவது பொருத்தமற்றது.
இதேவேளை
கல்முனை பிரதேச
பாடசாலையொன்றில் தரம் 09 மாணவர்களுக்கான கல்விச்சுற்றுலாவை ஒழுங்கு செய்தபோது தனது குடும்ப
வறுமை காரணமாக
சேர்ந்து கொள்ள
மறுத்த மாணவன்
ஒருவனை ஆசிரியர்
கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
தற்போது கல்முனை
மனித உரிமைகள்
பிராந்திய காரியாலயத்தில்
முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
எனவே,
உடனடியாக இதற்கான
அனுமதியை வழங்குவதை
நிறுத்துமாறு கிழக்கில் உள்ள வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு
பணிப்புரை வழங்குமாறு
மேற்படி சங்கம்
கோரியுள்ளது.
0 comments:
Post a Comment