கல்முனை ஸாஹிறாவிற்கு

தற்காலிக அதிபராக சிரேஸ்ட பிரதி அதிபர்

எம்.எஸ்.முஹம்மட் பொறுப்பேற்பு

(அஸ்லம்)



கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் தற்காலிக அதிபராக அப்பாடசாலையின் சிரேஸ்டபிரதியதிபர் எம்.எஸ்.முஹம்மட் இன்று 5 ஆம் திகதி கடமையேற்றுக் கொண்டார்.

இப்பாடசாலையின் தற்காலிக அதிபராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தரை கிழக்கு மாகாண சபை, மத்திய அரச சேவைக்கு விடுவிக்காததையடுத்து அவர் மீண்டும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு கடமைக்கு அறிக்கை செய்யுமாறு மாகாணக்கல்வி அமைச்சு பணித்திருந்தது.


இத்தேசிய பாடசாலை கடந்த 05 வருடங்களாக நிரந்தர அதிபர் இன்றி தற்காலிக அதிபர்களாலேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது. தற்போது தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ளவர் அப்பாடசாலையில் 22 வருடங்களாக கடமையாற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த அதிபராவார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top