தகவல் அதிகாரிகள் நியமிக்கப்படாமையால்
தகவல் பெறும் உரிமை மறுப்பு
கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் சங்கம் தெரிவிப்பு
(அஸ்லம்)
கிழக்கு
மாகாணத்திலுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள்,
அலுவலகங்கள் என்பவற்றிற்கு தகவல் பெறும் உரிமை
சட்டத்தின் கீழ் தகவல் வழங்கும் அதிகாரிகள்
இதுவரை நியமிக்கப்படாததன்
காரணமாக தகவல்களைப்
பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
கிழக்கு மாகாண
சங்கம் தெரிவிக்கின்றது.
விசேடமாக
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சு மற்றும்
அதனுடன் தொடர்புடைய
நிறுவனங்களுக்கு தகவல் கோரி அனுப்பப்படும் கடிதங்களுக்கு
எவ்வித பதிலும்
அனுப்பப்படாமல் காலம் கடத்தப்படுகிறது.
தகவல்
பெறும் உரிமைச்சட்டத்தின்
24(3)ன் கீழ்
தகவல் பெறும்
கோரிக்கை ஒன்று
கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட
தகவலைக் கோருவோருக்கு
எழுத்து மூலம்
பதிலளிக்க வேண்டும்.
அவ்வாறு பதிலளிக்காமல்
இருப்பது தண்டனைக்குரிய
குற்றம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்
கிழக்கு மாகாணக்கல்வியமைச்சிற்கு
தகவல் கோரி
கடிதங்கள் அனுப்பப்பட்டு
மாதக் கணக்காகியும்
எவ்வித பதிலும்
கிடைக்கப்பெறவில்லையென மேற்படி சங்கம்
தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் பெறும்
உரிமை தொடர்பான
ஆணைக்குழுவிற்கு முறையிடவுள்ளதாக மேற்படி சங்கச் செயலாளர்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment