அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களில்
பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களில்
பட்டப்படிப்பினைத்தொடர்வதற்கு
மாணவர்களுக்காகவட்டியில்லாக் கடன் திட்டத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்குத் தலா 800,000 ரூபா வீதம் வட்டியில்லாக் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவொன்று 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்தது. இதன் இளைஞர் சமூகத்துக்கு கிடைக்கும் உயர் கல்வி வாய்ப்பு அதிகரிக்கின்றது.
அதனடிப்படையில், அதன் முதற் கட்ட நடவடிக்கையாக 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் பெற்றுக் கொண்ட வெட்டுப் புள்ளிகளை கவனத்திற் கொண்டு இதற்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கும், இதற்காக போதுமான அளவு தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட வணிக முகாமைத்துவ தேசிய கல்லூரியினை (NSBM) இணைத்துக் கொண்டு
இத்திட்டத்தின் முதற் கட்டத்தை செயற்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment