கிராமிய விவசாய உற்பத்தியாளர்களுக்கு உதவும்
சிறுவிவசாய வியாபாரத்தொழில் பங்குடைமைகள்
நிகழ்ச்சித் திட்டத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கிராமிய விவசாய உற்பத்தியாளர்களுக்கு உதவும் சிறுவிவசாய வியாபாரத்தொழில் பங்குடைமைகள் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நிதியுதவியளிப்பதற்கு விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ((IFAD) இணக்கம் தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானமுள்ள, விவசாய உற்பத்திச் சாத்தியவளம் உயர்வான மாவட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தின் கீழ், 06 வருடங்களினுள் குறைந்த வருமானம் பெறும் 57,500 குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முழு முதலீட்டின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற இவ்வேலைத்திட்டத்தை ஜனாதிபதி செயலகம் முன்னெடுக்க உள்ளது.
அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும், அதனுடன் தொடர்பான கடன் நிபந்தனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெளியக மூலவளத் திணைக்களத்துக்கு அதிகாரத்தை அளிப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment