முகத்தை பர்தாவால் மூடியிருந்த முஸ்லிம் பெண்ணை

பஸ்ஸில் ஏற்ற மறுத்த சாரதி


ஜேர்மனியில் கர்ப்பிணி பெண் ஒருவர் இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருந்ததால் அவரை பஸ்ஸில் ஏற்ற மறுத்த சாரதியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி சாலையில் இருந்த தனியார் பஸ்ஸில் ஏற முயன்றுள்ளார், அந்த பெண்மணி கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.
இஸ்லாமிய வழக்கப்படி தன் முகத்தை பர்தாவால் மூடியிருந்த அந்த பெண்ணிடம், அவர் பர்தா அணிந்திருந்ததையே காரணம் காட்டி பஸ்ஸில் ஏற்ற சாரதி மறுத்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க சாரதியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவருக்கு €10,000 அபராதம் விதித்தனர்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், அறியாமையால் பஸ் சாரதி இப்படி நடந்து கொண்டு விட்டதாக தனியார் பஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top