நாளை மறுநாள்
புதன்கிழமை
முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பம்
(அஸ்லம்)
நாடாளவிய
ரீதியில் உள்ள
சகல முஸ்லிம்
பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக
நாளை மறுநாள்
புதன்கிழமை 19ம் திகதி திறக்கப்படுவதாக கல்வியமைச்சு
அறிவித்துள்ளது.
இதேவேளை
இரண்டாம் தவணை
கல்வி நடவடிக்கைக்காக
தமிழ், சிங்கள
பாடசாலைகள் இம்மாதம் 26ம் திகதியே திறக்கப்படுமென
கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அட்டாளைச்சேனை
தேசிய கல்விக்கல்லூரி,
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, தர்கா நகர் தேசிய கல்விக்
கல்லூரி என்பனவும்
எதிர்வரும் புதன்கிழமை 19ம் திகதி திறக்கப்படுமெனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
19ம்
திகதி திறக்கப்படும்
முஸ்லிம் பாடசாலைகள்
மற்றும் கல்வி
நிறுவனங்கள் என்பன நோன்பு விடுமுறைக்காக மே
மாதம் 27ம்
திகதிமுதல் ஜூன் 27ம் திகதி மீண்டும்
மூடப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment