சாய்ந்தமருது
பொலிவேரின் கிராமத்தில்
தனியார் நிறுவனங்களுக்கு 110 பேர்ச் காணி
குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது
மக்கள் அதிர்ச்சி
(அபூ முஜாஹித்)
சாய்ந்தமருது
பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட சுனாமி மீள்குடியேற்றக் கிராமமான பொலிவேரின்
கிராமத்தில் அரச நிறுவனங்கள் அல்லாத இரு
தனியார் நிறுவனங்களுக்கு
110 பேர்ச் அரச காணிகள் குத்தகை அடிப்படையில்
வழங்கப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமைச்சட்டத்தின்
கீழ் கோரப்பட்டதற்கமைய
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது
பிரதேச செயலாளர்
பிரிவினுள் பொதுமக்கள் குடியிருப்புக்கான
காணித் தட்டுப்பாடும், அரச நிறுவனங்களை
அமைப்பதற்கான காணித் தட்டுப்பாடும் உள்ள நிலையில் அரச
நிறுவனமல்லாத தனியார் நிறுவனங்களுக்கு இவ்வாறான காணியை
குத்தகை அடிப்படையில்
வழங்கியுள்ளமை குறித்து பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
நாட்டின்
ஏனைய பிரதேச
செயலகங்கள் மட்டத்தில் பயங்கரவாத சம்பவங்களில் கொல்லப்பட்ட
பொலிஸார் மற்றும்
முப்படையினருக்கு அரச நிலங்களை வழங்கி அரசு
மூலமாக வீடுகள்
அமைத்துக் கொடுக்கப்படும்
நிலையில் சாய்ந்தமருதுப்
பிரதேசத்தில் அவ்வாறு காணிப்பங்கீடுகள் வழங்கப்படவில்லை.
இப்பிரதேச
செயலகப்பிரிவில் 15ற்கு மேற்பட்ட
பொலிஸ், முப்படை
வீரர்கள் விடுதலைப்புலிகளினாலும்,
தமிழ் ஆயுதக்குழுக்களினாலும்
கடந்த காலங்களில்
கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான எந்தவொரு
காணி வழங்கும்
முயற்சியையும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் மேற்கொள்ளாமையானது
ஒரு அநீதியான
செயற்பாடாகும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை,
எட்டு அரச
நிறுவனங்களுக்கு பொலிவேரியன் கிராமத்தில்
448 பேர்ச் காணி கட்டடங்களை அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பல
கட்டிடங்களை அமைப்பதற்கு காணிகளை பெற்றுக்கொள்வதற்கு பிரதேச அரசியல்வாதி ஒருவர் முயற்சி
செய்து வருவதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment