பிரித்தானிய நாட்டின் பெரிய குடும்பம்:
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 20-வது குழந்தை
பிரித்தானிய
நாட்டின் மிகப்பெரிய
குடும்பத்திற்கு தலைவியான தாயார் தற்போது 20-வது
பிள்ளையை பெற்றெடுக்க
உள்ளதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில்
உள்ள லான்கேஷிர்
நகரில் Sue மற்றும் Noel Radford என்ற தம்பதி வசித்து
வருகின்றனர்.
நாடே
வியக்கும் வகையில்
தாயாருக்கு இதுவரை 19 பிள்ளைகள் பிறந்துள்ளன.
தாயார்
14 வயது சிறுமியாக
இருந்தபோது முதன் முதலாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதன் பின்னர்
ஒவ்வொரு ஆண்டும்
திட்டமிட்டு குழந்தைகளை பெற்று வருகிறார்.
இத்தம்பதிக்கு
தற்போது 6 மாதக்குழந்தை
முதல் 28 வயது
மகன் வரை
19 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 10 பேர் ஆண்கள்,
9 பேர் பெண்கள்
ஆவர்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆண் குழந்தை பிறக்க உள்ளதால், ஆண் பெண் எண்ணிக்கை சமமாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், 20-வது குழந்தையோடு கர்ப்பமாவதை நிறுத்த உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
முதலில் குழந்தை பெற்றெடுக்கும்போது பிரசவ வலியை உணர்ந்ததாகவும், அதற்கு பின்னர் ஒவ்வொரு பிரசவத்திற்கும் வலி கடுமையாக தெரியவில்லை எனத் தாயார் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகமாக இருந்தாலும் கூட அரசாங்க நிதியுதவியை பிறர் குடும்பத்தினரை போலவே பெற்று வருகிறார்.
இவரது குடும்பத்தில் தற்போது 19 பிள்ளைகள் உள்ளதால் ஒவ்வொருவரின் உணவு உள்ளிட்ட பிற செலவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 30,000 யூரோ செலவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை வியக்க வைத்துள்ள இத்தம்பதிக்கு 3 பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment