திருமணமான சில மாதங்களில் பிரபல டிவி நடிகர் பிரதீப்

தூக்கு போட்டு தற்கொலை


தொடரும் தற்கொலை சம்பவங்கள்

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.



பிரதீப் தற்கொலை

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரபல டிவி-யின்சுமங்கலிஎன்னும் புதிய தொடரில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தவர், பிரதீப்.  ’பாசமலர்சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை பாவனியுடன் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
நேற்றிரவு பிரதீப்பின் அறைக்கு அவரது மனைவி சென்றுள்ளார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரதீப் குமார் காணப்பட்டிருக்கிறார். உடனே பதறிப்போன அவரது மனைவி, நண்பர் ஒருவருடன் சேர்ந்து பிரதீப் குமாரின் உடலை கீழிறக்கி அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் பிரதீப் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன.

சபர்ணா



சொந்த பந்தம் டிவி சீரியலில் நடித்து வந்த சபர்ணா மதுரவயலில் உள்ள அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்தவர்.

சாய் பிரசாந்த்



அண்ணாமலை, செல்வி உள்ளிட்ட ஏராளமான டிவி சீரியல்களில் நடித்த சாய் பிரசாந்த் மன அழுத்தத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

பிரதியுஷா



ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஷோபனா




டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷோபனா உடல் நலக்குறைவால் நடிக்க முடியாமல் போனது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

முரளி மோகன்



வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நடிகை வைஷ்ணவி




சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக 2004ம் ஆண்டில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 2006ம் ஆண்டு சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top