நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக

90 சம்பவங்களின் பதிவு ..

(முழு விபரம் இணைப்பு )



கடந்த 8 வருட மஹிந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 21 சம்பவங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்று சேர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது.
ஆனால், இந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு முன்னைய அரசை விட பேரிடி காணப்படுகிறது. நல்லாட்சி அரசு உருவாகி 3 வருடங்கள் நிறைவடையாத போதும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசில் 80 இற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படியே போனால் இந்த ஆட்சியின் நிறைவுக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக 500 இற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெறலாம். ஆனால், இது தொடர்பாக தமிழ் , முஸ்லிம் ஊடகங்கள் பேசுவதில்லை. காரணம், இந்த ஊடகங்கள் பெரிதும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவுடன் இயங்குபவைகள் ஆகும்.

1.22.02.2015 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு  வந்து ஒரு மாதத்திற்குள் அவரது சொந்த தொகுதியான பொலன்னறுவையில்  50 இற்கும் மேற்பட்ட  முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்த ஒரு சிற்றூரான போகஹதமனயில் (அத்தமுனை மின்னேறிய செயலாளர் பிரிவு, இல.40 கிராம சேவைகள் பிரிவுஒரு குர்-ஆன் மதரசா நடைபெற்று வந்தது. இந்த மதரஸா எதிர்காலத்தில் பள்ளிவாசலாக மாற்றமடையகூடும் என்ற சந்தேகபட்ட இனவாதிகளால்  மதரசா தரைமாக்கப்பட்டது. இதுதொடர்பாக நல்லாட்சி ஜனாதிபதிக்கு தெரிவித்தும் இன்றுவரை எந்த நடவடிக்கையோ தீர்வோ கிடைக்கவில்லை.

2.30.05.2015 அன்று கொழும்பு பொரலையில் அமைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

3.02.06.2015  இஸ்லாம் தடைசெய்துள்ள ஓரினச்சேர்க்கையை ஆதரித்து அமைச்சர் மங்கள சமரவீர .நா.சபையில் வாக்களித்தமை. இதை இலங்கையிலும் வெகுவிரைவில் அமுல்படுத்த உத்தேசித்துள்ளமை. இதற்கு நல்லாட்சியிலுள்ள 20 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருப்பது அவர்களின் இந்த உலக பதவிக்காகவா  ??? மௌனம்...... அர்த்தம் சம்மதமா?

4.16.07.2015 இப்பாமுகவ, பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் வாலினால் வெட்டப்பட்டனர். இதன்போது இன்னும் மூன்று இளைஞர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று வரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


5.07.07.2015 அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள மணிகூண்டு கோபுர உச்சியில் திடீரென பௌத்த தூபி ஸ்தாபிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் ஊமை கண்ட கனவு போல இருந்தார்கள்.

6. 07.01.2016 வெல்லம்பிட்டி, பொல்வத்தை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் மக்கள் இஷா தொழுகையை நிறைவேற்றிவிட்டு   வீடு திரும்பிய முஸ்லிம்கள் மீதுசிங்க லேஎன கோஷமிட்டவர்கள் முஸ்லிம்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியமை. இது தொடர்பாக வெள்ளம்பிடி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வரை யாரும் கைது செய்யப்படவில்லை. நல்லாட்சியில் என்னாச்சு?

7. 18.01.2016 நாட்டில் மாடறுப்பை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக இறைச்சிக்காக தேவைப்படும் உணவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு தான் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில்   2016 ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

8. 13.03.2016 வத்தளை, வெலிசர 20 அடி பாதை வீதியில்  மஸ்ஜித் நிர்மாணப் பணிகளுக்கு தடை உத்தரவு பிறபிக்கப்பட்டமை. இந்த தடை உத்தரவு வத்தளை பிரதேச சபையின் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.

9. 16.03.2016 மகிந்தவின் ஆட்சி காலத்தில் பிரச்சினை ஏற்பட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பலாங்கொடை ஜீலானி (கூரகள) பள்ளிவாசலை இந் நல்லாட்சியில்  அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவையும், பொலிசாரின் உத்தரவையும்  மீறி  இனவாத சிங்கள ராவய அமைப்பு ஆயுதங்களுடன் பிரவேசித்து அச்சுறுத்தல் விடுத்தனர். இவர்களை அந்த ஊர் சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர். ஏன், இவர்களை பொலிசார் நல்லாட்சியில் கைது செய்யவில்லை.

10. 28.05.2016 கொழும்புகண்டி பிரதான வீதி, நெலுந்தேனிய பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம். இது தொடர்பாக இன்று வரை பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

11. 04.06.2016 அம்பாறை நகரில் கூடிய பௌத்த பிக்குகள்  மலேகாலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளிவாசல்களை தடை செய்தமை. இதுதான் நல்லாட்சிக்கு பங்களித்த முஸ்லிம்களுக்குக் கிடைத்த பரிசா?

12. 07.06.2016 தலதா மாளிகைக்கு 200 மீற்றர் தூரத்திலேயே  அமைந்துள்ள கண்டி  லைன் பள்ளிவாசலின் மினாரா (கோபுரம்நிர்மாணப் பணிகள் நல்லாட்சியில்  நிறுத்தப்பட்டது.

13. 16.06.2016 வரகாபொலை பள்ளிவாசளின் மினாரத்தை குறிவைத்த இனவாதிகள். வரகாபொலை தேவகிரி விகாரையை விட உயரமான மினாராவை முஸ்லிம்கள் கட்டக்கூடாதென்று நல்லாட்சியில் அச்சுறுத்தல் விடப்பட்டது.

14. 21.06.2016  பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொதுபல சேனா அமைப்பின்  செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டு முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்தியமை. இதற்கு, முஸ்லிம் அரசில்வாதிகளும். நல்லாட்சிக்கு வாக்களித்த  முஸ்லிம் மக்களும் அல்லாஹ்வையும், நபி (ஸல்அவர்களையும் விட இந்த ஆட்சியை ஈமான் கொண்டு விட்டு இருந்தமை. இதற்கு இன்னும் மௌனம் சாதித்தவர்கலாக இருக்கிறார்கள்.

15. 23.06.2016, மஹியங்கனை இன்னுமொரு அளுத்கமையாக மாற்றுவோம்ஞானசாரவை கேட்க யாருமில்லையா? பௌத்த கொடியை  முஸ்லிம் இளைஞர்களில்  ஒரு சிலர் எரித்தத சம்பவத்தை வைத்து அப்பகுதி முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி ஊதி பெரிதாக்கி முஸ்லிம்களை பீதியடையசெய்து  மற்றுமொரு அளுத்கமை சம்பவத்தை உருவாக்க பொதுபல சேனாவின் ஞானசார தேரர் எத்தனித்தார். ஆனால், அப்பகுதி முஸ்லிம் பிரமுகர்கள் பௌத்த மத குருமார்களுடன் சமரசம் செய்துக்கொண்டனர்.

16. 01.07.2016 அக்குரணை, அளவத்துகொடை பிரதேசத்தில் மல்கம்மந்தெனிய ஜும்மா பள்ளிவாசலுக்கருகில் முச்சக்கர வண்டியில் வந்த இனவாதிகள் பன்றியின் உடற்பாகங்களை வீசி விட்டு நல்லாட்சியில் தப்பியோடிய சம்பவம். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும்இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

17. 16.07.2016 ஹபுகஸ்தலாவையில் அமைந்துள்ள அல் ஹாமிதியா அரபுக் கல்லூரியின் 3 பேஸ் மின்மானியும் (ட்ரான்ஸ்போர்மர்) தண்ணீர் கொள்கலனும் (பவ்சர்) இனவாதிகளினால்  தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

18. 26.08.2016 முஸ்லிம் ஊடகவியலாளர் (BBC மற்றும் சுயாதீன) பர்ஹான் நிசாமுத்தீன்  காலிதளாபிட்டிய, அப்துல் வஹாப் மாவத்தையில் வைத்து வாளால் வெட்டி தாக்கப்பட்ட சம்பவம். அவர் கராப்பிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்தார்.. நல்லாட்சியில் ஊடக சுதந்திரம் எங்ககே?

19. 08.08.2016 தெஹிவளை, பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பிற்கு நல்லாட்சியில், பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டு முஸ்லிம்களின் ரமலான் மாத தாராவிஹ் தொழுகைக்கூட தடைப்பட்டமை.

20. 24.08.2016 ஹிரியுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் சொந்தமான விளையாட்டு மைதானத்தைக் பெரும்பாண்மை இனத்தவர்களுக்கு கைப்பற்றி, பொது மைதானமாக மாற்ற இனவாதிகளோடு சிங்கள ராவய. முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களை புறக்கணிக்குமாறு வீடு வீடாகச் சென்று  பிரசாரம் செய்து , துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

21. அனுராதபுரத்தில், களுத்துறை   முஸ்லிம் வர்த்தகர்  ஒருவருக்கு சொந்தமான  வர்த்தக நிலையம் (LAST CHANCE) இனவாதிகளினால் 2 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் எரித்து நாசமாக்கப்பட்டமை. இது, மகிந்தவின் காலாத்தில் நடந்தால் இனவாதம்நல்லாட்சியில் நடந்தால் மின் ஒழுக்கு (வயர் சோர்ட்) என்று கூறி தம்மைத்தாமே திருப்தி படுத்திக்கொள்கிறார்கள். இதுபோல பல வயர் சோர்ட் சம்பவங்கள் அன்றாடம் நல்லாட்சியில் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

22. கிளிநொச்சிவத்தளை ஹுனுபிட்டி, கொட்டவை ஆகிய பகுதிகளில் இருந்த தொழிற்சாலைகள் எரித்து நாசமாக்கப்பட்டமை. இன்று வரை இதனுடன் தொடர்புள்ளவர்களை கைது செய்யாமை. இதும் வயர் சோர்ட் என நினைக்கிறோம்.

23. 21.08.2016 அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்கு உட்பட்ட புட்டம்பை மஸ்ஐிதுல் ஜலாலீயா பள்ளிவாசல் தமிழ் இனவாதிகளினால் தாக்கப்பட்டது.

24. 23.08.2016 பேராதெனிய பல்கலைகழகத்தில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை. பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

25. 06.08.2016 பொரலஸ்கமுவ பள்ளிவாசலுக்குள் புகுந்த இனவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி பொருட்களுக்கும் சேதம் விளைவித்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை.
26. 19.08.2016 முஸ்லிம்களை 30 நிமிடத்தில் அழித்துவிடுவோம், என்பவனை கைதுசெய்ய முடியாதா..?  முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம் என பொலிசாரை வைத்துக்கொண்டே சின்ஹலே அமைப்பினர் பகிரங்கமாக கூறியது தொடர்பில் அரசாங்கம் இன்னமும் கைது செய்யாமை. இது தொடர்பாக கறுவாத்தோட்ட பொலிசில் அஸாத்சாலி அவர்களும் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளை நாய் கூட்டில் போடுவோம் எனக் கூறிய சந்திரிகா அம்மையார் எங்கே
27. 06.09.2015 ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடைநடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து அங்கிருந்த மார்க்க விளக்க புத்தகங்களை நல்லாட்சியில் அபகரித்துசென்றனர். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது..

28. 29.09.2016 தம்¬புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்¬ளி¬வாசல் தொடர்பாக மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை இன்றுவரை பள்ளிவாசலுக்கு மாற்றிடம் வழங்கப்படவில்லை.

29. 05.09.2016 யாழ். பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டமை.

30. 17.09.2016 கல்ஹின்ன பள்ளியின் மீதும் அதற்கருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் மீதும்  தாக்குதல்  நடத்தி அவர்களுக்கு சொந்தமான வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டன.

31. 22.09.2016 அளுத்கமையில் மீண்டும் முஸ்லிம் வர்த்தகர்  ஒருவருக்கு சொந்தமான மல்லிகாஸ் புடவை வர்த்தக நிலையம் எரிந்து சாம்பலாக்கப்பட்டமை. இதே கடை மகிந்தவின் ஆட்சிகாலத்தில் பொது பல சேனாவால் முதல் முதல் எரிக்கப்பட்ட கடை. இதுவும் வயர் சோர்ட் என நல்லாட்சிக்கு வாக்களித்தவர்கள் நினைக்கிறார்கள்.

32. ஹிஜாப்புடன் சென்ற ஆசிரியைக்கு சிங்கள பாடசாலை அதிபர் வழங்கிய பதில்: வரக்காபொலை துல்ஹிரிய மகா வித்தியாலயத்திற்கு வரக்காபொலையைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு விஞ்ஞான பட்டதாரி நியமன் வழங்கப்பட்டது. நியமனக்கடித்ததுடன் துல்ஹிரிய மகா வித்தியாலயத்திற்கு குறித்த ஆசிரியை ஹிஜாப் அணிந்து சென்றுள்ளார். பாடசாலையின் அதிபரிடம் தனது நியமனக்கடிதத்தை கையளித்தபோது அதனை பார்த்த அதிபர் உங்களுடைய ஹிஜாப் ஆடையை கலைந்து சாரி அணிந்து வருவீர்களாயின் உங்களை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியுமென்றும், ஹிஜாப் உடையுடன் உங்களை இப்பாடசாலையில் அனுமதிக்க முடியாது என்றும், வேறு பாடசாலையை அல்லது முஸ்லிம் பாடசாலையொன்றை நாடுமாறும் அந்த அதிபர் பணித்துள்ளார். இந்நிலையில் குறித்த ஆசிரியையின் நியமனம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

33. 02.10.2016 மாதம்பை முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு திட்டம்…………. மாதம்பை பழைய நகர் என்பது பன்னெடுங்காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும்  ஒரு கிராமம் ஆகும். இது கொழும்பு - சிலாபம் -3 வீதியில் அமையப் பெற்றுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் முற்காலம் தொட்டு இன்றுவரை வாழ்ந்து வந்திருப்பினும், இவர்களிடம் 1886 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்ததற்கான அத்தாட்சியாக காணி உறுதிகள் காணப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன், கீர்த்தி சேனாநாயக்க என்பவருக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு சொந்தமான இக்காணிகளை  அபகரிக்கக் பார்கிறார். இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் மேல்மட்ட அரசியல்வாதிகளும் பின்னணியில் இருப்பதாக சந்தேகங்கள் இல்லாமல் இல்லை. நல்லாட்சியில் இதுவும் தேவைதானா?

34. புலி பயங்கர வாதிகளினால் சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்ட வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களை அவர்களின் சொந்த இடங்களான மரிச்சிக்கட்டி, கொண்டச்சி, பாலக்குழி ஆகிய இடங்களில் மீள் குடியேற்றம் செய்ய மஹிந்த அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தும்நல்லாட்சியில்  இந்த மீள் குடியேற்றம் தொடர்பாக பொதுபல சேனா அங்கு அடாவடித்தம் செய்து  பிரச்சினைப்படுத்தி இன்று வரை அந்த மக்களின் மீள் குடியேற்றம் தடைசெய்யப்பட்டுள்ளமை.

35. வடக்குகிழக்கில் 500 ரூபா காசுடன் விரட்டப்பட்ட 20 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை 3ஆம் தரமாக என்னும் நல்லாட்சி, .நா. சபை, டயஸ் போரா மற்றும் TNA ஆகியவைகளை திருப்திபடுத்தும் முகமாக   தமிழ் மக்களின் பிரச்சினைகளை மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை.... முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், முஸ்லிம்களின் காணிகளில் இருந்து பாதுகாப்பு படையினரை வெளியேற்றுவது ஆகியவைகள் தொடர்பில் நல்லாட்சி இன்றுவரை எந்த உடன்பாடுமில்லை.

36. இம்முறை நல்லாட்சியில் புனித ஹஜ் பெருநாள் குர்பானுக்காக இலங்கை நாளா பக்கங்களிலும் பிரயாண அனுமதி பத்திரம் மற்றும் அதற்குரிய சட்டபூர்வமான ஆவணங்களுடன் கொண்டுவரப்பட்ட மாடுகளை ஒருசில பொலிசார், இனவாதிகளின்   வேண்டுகோளுக்கிணங்க மாடுகளை பறிமுதல் செய்து வழக்கு தாக்கல் செய்தமை. அத்துடன் ஒரு சில இனவாதிகள் பாணந்துறைகளுத்துறைகுருநாகல்கண்டிவத்தளை- பேருவளை- – அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் மாடு அறுப்பதற்கு எதிராக நல்லாட்சியில்  பிரச்ச்சினைபடுத்தி, இன்றுகூட பொலிஸ் நிலையங்களில் 14 மாடுகள் கட்டிவைக்கப்பட்டுள்ளது கானக்கூஒடியதாக இருக்கின்றது. நிட்டம்புவை போலீஸ்நிலையத்தில் களுத்துறை வர்த்தகர் ஹுசைன் என்பவருடைய மாடுகள் இன்றுவரை விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. இதுபோல பல பொலிஸ் நிலையங்களில் இதே நிலைமை காணக்கூடியதாக இருக்கின்றது.

37. 12.09.2016 பெல்மடுல்ல, பஞ்சன்கொட பள்ளிவாசளுக்கருகில் ஹஜ்ஜுப் பெருநாளில்  குர்பான் தொடர்பாக பெரும் பதற்ற நிலை உருவாக்கப்பட்டு  இனிமேல் அப்பிரதேசத்தில் மாடருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

38. பண்டாரகமை தேர்தல் தொகுதி பாணந்துறை பிரதேசசபைஎழுவில முஸ்லிம் கிராமத்தில் அமைக்கப்பட்டுகொன்டிருந்த குர் ஆன் மதரசா பெரும்பாண்மை மக்களுடன் ஏற்பட்ட பிரச்சினையை முன்னாள் ஜனாதிபதியின்  ஆலோசனைப்படி மதரசாவைக் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரான  எரிபொருள் மின்சக்தி அமைச்சர் அஜித் பீ பெரேரா இந்த மதரசாவிற்கு எதிராக பௌத்த பிக்குகளைத்தூண்டிவிட்டு நல்லாட்சியில் களமிறக்கி இந்த மதரசாவிற்கு தடைவிதிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது
39. வத்தளை, ஹுனுபிட்டிய குர்ஆன் மதரசா பள்ளிவாசல் ஆகும் என்ற அச்சத்தால், இனவாதிகளால் இந்த மெட்ராசாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை..

40. இன்று இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்ரவேலர்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இஸ்ரேல் வெள்ள நிவாரணம் என்ற பெயரில் இலங்கையில் நாளா பக்கங்களுக்கும் வாரி வழங்கினர். இதில், முஸ்லிம்களுக்கும் வாரி வழங்கினர். நல்லாட்சி அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான காணிகளை வடமத்திய மாகணங்களில் இஸ்ரேலுக்கு விவசாய செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேரடியாகவும்மறைமுகமாகவும் இலங்கை மண்ணில் சதிவேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை . முஸ்லிம்தமிழ் மக்களையும் பிரச்சினைக்குள் ஈடுபடுத்தலாம். இவர்கள்   சதி செய்வதில் வல்லவர்கள். இவர்கள் உலகில் எந்த நாடுக்கு சென்றாலும் அங்கு முஸ்லிம்களுக்கெதிரான சதிவேலைகளை செய்து பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுவார்கள். ஏன் முஸ்லிம் மக்கள் இதை சரிகாண்கின்றனர்.

41. அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று நுரைச்சோலை பிரதேசத்தில் சவுதி அரசினால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் பகிர்தளிப்பதற்கு எதிராக   சிஹல உறுமய கட்சியின் செயலாளர்சம்பிக்க ரணவக்கவால் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா இத் திட்டத்தினை மூன்று இனத்திற்கும் அவரவா்களது இன விகிதசாரத்திற்கேற்ப சுனாமியினால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு பகிர்தளிக்கும்படி படி தீர்ப்பு வழங்கினார். அனாலும், அதற்கு அப்போது உள்ள முஸ்லிம் லைமைத்துவம் எதிர்த்தது. அதே தீர்ப்பை இன்று முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஏற்றுக்கொண்டு சம்பிக்கவுடன் ஒரே அரசாந்தத்தில் தேனும் பாலும் போல இருக்கிறார்கள். என் அன்று இந்த நீர்ப்பை ஏற்றிருந்தால் நல்லதாய் இருந்திருக்கும். இன்றைய ஜனாதிபதி சொன்னதிற்கு இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள்?????????????
42. 18.10.2016 புல்மோட்டையிலுள்ள அரிசிமலை பிரதேசத்துக்கு சொந்தமான பள்ளிவாசல்,   தீடீர் என சில இனவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டது.

43. 16.10.2016 முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானமாவத்தகம பொலிஸ் பிரிவில் கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ள பொலிதீன் தொழிற் சாலை தீயினால் எரிந்து நாசமானது. 60 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

44.  29.10.2016 தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, “இறக்காமத்துக்குஅண்மையிலுள்ள, மாணிக்கக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள, “மாயக்கள்ளி மலையில்புத்தர் சிலை ஒன்று திடீரென வைக்கப்பட்டது. பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

45. GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் கை வைத்தமை. ( இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 03.11. 2016 அன்று பாரிய ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை)

தொடரும்.....

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top