சற்சொரூபவதி நாதனின் இறுதிக் கிரியைகள் இன்று
இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்; காலஞ்சென்ற
மூத்த ஒலிபரப்பாளரும், விருது
வென்ற செய்தி
வாசிப்பாளருமான சற்சொரூபவதி நாதனின் இறுதிக் கிரியைகள்
இன்று பொரளை
கனத்தை மயானத்தில்
நண்பகல் இடம்பெறும்.
சில
நாட்களாக சுகவீனமுற்றிருந்த
செல்வி சற்சொரூபவதி
நாதன் வியாழக்கிழமை
நீர்கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் காலமானார்.
இறக்கும்போது, அவருக்கு 81 வயது.
ஒலிபரப்புத்
துறையில் செல்வி
சற்சொரூபவதியின் அனுபவம் நான்கு தசாப்தங்களைத் தாண்டி
நீடிக்கின்றது. ஒரு அறிவிப்பாளராக, செய்தி வாசிப்பாளராக,
நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, திறமையான நிர்வாகியாக, பேச்சாளராக,
பல்கலைக்கழகத்தில் வருகை தரு
விரிவுரையாளராக அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது.
0 comments:
Post a Comment