பணம் கொடுத்து டிக்கெட் பெற்று

பஸ்ஸில் ஹற்றன் சென்ற பிரதமர் ரணில்!



பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணம் கொடுத்து டிக்கெட் பெற்று பயணிகள் பஸ் ஒன்றில்  பயணம் செய்து, இலங்கை அரசியலில் புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.
புதிதான பயணத்தில் இணைந்த பஸ் ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு ஹற்றன் நோக்கி பயணித்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அதிகாரிகள் சிலரும் இணைந்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் ஒருவர் பயணிகள் பஸ்ஸில் பயணித்த சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top