சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்
முஸ்லிம் பெண்
ஹலிமா யாகூப்
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார். அந்தபெருமையை ஹலிமா யாகூப் Halimah Yacobப் பெற்றுள்ளார்
சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக உள்ள ஹலிமா யாகூப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். சிங்கப்பூர் அரசியல் வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஹலிமா.
சிங்கப்பூரின் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஹலிமாவுக்குத் தற்போது 62 வயதாகிறது. 2013-ம் ஆண்டு சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராகப் பதவியேற்றவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிங்கப்பூர் அரசியல் சாசனத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கப்பூரில் வாழும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிட முடியும் எனப் புதிய உத்தரவு கொண்டுவரப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே ஹலிமா யாகூப் ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்டியிடுகிறார்.



0 comments:
Post a Comment