மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக் கூடிய
மாத்திரை கிடையாது!
இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவிப்பு

மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து வகைகள் கிடையாது என இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்தைய மருத்துவ முறைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து மாத்திரைகள் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் சில வகை மருந்துகளின் பக்க விளைவாக குழந்தை பாக்கியம் வரையறுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு.
எனினும், நேரடியாக மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலான மருந்து மாத்திரைகள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனமும் இதேவிதமான கருத்தை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து மாத்திரைகளை உணவில் கலந்து விநியோகம் செய்வதாகக் கூறி, அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர்
இது பின்னர் பாரிய சர்ச்சையை ஏற்பட்டுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top