தேசிய காங்கிரஸ் தலைவர்
அதாஉல்லாவின் புகைப்படங்கள்
அதிருப்தியாளர்களால் எரிப்பு
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு எதிராக, அக்கரைப்பற்று பிரதேச வீதிகளில், டயர்கள் எரிக்கப்பட்டு, அவரது புகைப்படங்களைத் தாங்கிய பதாதைகளுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தியாளர்களால் தீ இட்டுக்கொளுத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபைக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளை கட்சியின் தலைமை,) உத்தியோகபூர்வமாக அறிவித்த போதே, இந்த எதிர்ப்புச் சம்பவம் மேற்கொள்ளப்பட்ட்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:
Post a Comment