குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு
கடந்த
ஈஸ்டர் ஞாயிறு
தினத்தன்று நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில்
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக
உயர்ந்துள்ளது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
ருவான் விஜேவர்தன
தெரிவித்துள்ளார்.
இவர்களில்
38 பேர் வெளிநாட்டவர்கள்
எனவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்
இன்று நடைபெறும்
விசேட கூட்டத்தில்
அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்
சம்பவங்களில் காயமடைந்த 375 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்
சிகிச்சை பெற்று
வருவதாகவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment