இறந்தோரின் எண்ணிக்கை 359
இன்னும் ஒரு சில தினங்களில் நிலைமையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்
இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
கடந்த
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோர்களின்
எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.
விசாரணைகள்
தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புபட்ட
சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்னர்.
இன்னும்
சில தினங்களில்
இந் நிலைமையை
கட்டுபாட்டுக்குள் கொண்டு வர
கூடடியதாக இருக்கும்
என்று வெகுஜன
ஊடகத்துறை அமைச்சரும்,
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான்
விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க
தகவல் திணைக்களத்தில்
இன்று காலை
வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர்
உரையாற்றினார்.
இன்று
காலை 9.15 வரையிலான
காலப்பகுதியில் இறந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்திருப்பதாக
வெகுஜன ஊடகத்துறை
அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான்
விஜேவர்த்தன தெரிவித்தார்.
இறந்தோரில்
வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 39. இவர்களுள்
17 சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக
தெரிவித்தார். சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று
வருகின்றன.
இரண்டு
இஸ்லாமிய அடிப்படை
வாத குழுக்கள்
இதில் ஈடுபட்டிருப்பதாக
தெரிய வந்துள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
அது
வரையில் முழுமையான
தகவல்களை வெளிப்படுத்த
முடியாது என்றும்
வெகுஜன ஊடகத்துறை
அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான
ருவான் விஜேவர்த்தன தெரவித்துள்ளார்.
0 comments:
Post a Comment