இருவரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து!
மேலும் ஒருவர் பலி
கொத்மலை
- நுவரெலியா பிரதான வீதியில் நேற்று பிற்பகல்
இடம்பெற்ற விபத்தில்
மூன்று பேர்
பலியாகியுள்ளனர்.
குறித்த
விபத்து அப்பகுதியிலுள்ள
ஆயுர்வேத வைத்தியசாலைக்கு
அருகில் வைத்து
இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கொத்மலை
ஆயூர்வேத வைத்தியசாலைக்கு
சென்றவர்கள் காரில் வீடு திரும்பியுள்ளனர். இதன்போது சாரதி காரின் வேகத்தை
அதிகரித்துள்ளார்.
இந்த
நிலையில் கட்டுப்பாட்டை
இழந்த கார்
சுமார் 80 அடி
பள்ளத்தில் பாய்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில்
இருந்து தெரியவருகிறது.
சம்பவத்தில்
சாரதியும், காரில் பயணித்த ஒருவரும் ஸ்தலத்திலேயே
பலியாகியுள்ளதாகவும், மற்றுமொரு நபர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த
விபத்தில் அட்டபாகே
கெக்குலாந்த பகுதியை சேர்ந்த 70 வயதான அசோல
ராஜபக்ஸ, 80 வயதான சி.அபேபால மற்றும்
78 வயதான ஏ.சுமனாவத்தி ஆகியோரே
உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த
மூவரின் சடலங்களும்
பிரேத பரிசோதனைக்காக
நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கபட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின்
பின் சடலங்கள்
உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளன.
இந்த
நிலையில் சம்பவம்
தொடர்பான மேலதிக
விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment