இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க ஐ.நா.
விசாரணை
குழு அமைப்பு
10 மாதங்களில் விசாரணை
முடிவடையும்
இலங்கை போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபை குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் பின்லாந்து முன்னாள் அதிபர் மார்டி அடிசாரி, பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை ஆணைய தலைவரும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் தலைவருமான அஸ்மா ஜகாங்கிர், நியூசிலாந்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நோபல் பரிசு பெற்ற லாவுரேட், மற்றும் முன்னாள் ஆளுர் ஜெனரல் சிலிவியா கார்ர்ரைட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில்
கடந்த 2009ல்
நடந்த இறுதிக்கட்ட
போரின்போது 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்டதாகவும், பெண்கள்
பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. இது தொடர்பாக
இலங்கை அரசின்
மீது மனித
உரிமை
விசாரணை நடத்த, கடந்த மார்ச்சில் நடந்த
ஐ.நா.
மனித உரிமை கவுன்சில்
கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இதற்கு இலங்கை
அரசு கடும்
எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும்,
மனித உரிமை
மீறல் குறித்து
விசாரிக்க பல்வேறு நிபுணர்கள்
அடங்கிய 12 பேர் கொண்ட குழுவை ஐ,நா மனித
உரிமை
கவுன்சில் அமைத்துள்ளது. இக்குழு இலங்கைக்கு சென்று
விசாரணை
நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு அனுமதி
அளிக்க ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ மறுத்து விட்டார்.
சமீபத்தில்
நடைபெற்ற நாடாளுமன்ற
கூட்டத்திலும், நிபுணர் குழு இலங்கையில்
விசாரணை மேற்கொள்ள
அனுமதிக்க முடியாது, விசாரணைக்கு
ஒத்துழைக்க முடியாது என்று அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதனிடையில் நிபுணர் குழுவினர் பெயர்களை நவநீதம் பிள்ளை
நேற்று அறிவித்தார்.
அவர் அளித்த
பேட்டியில், ‘‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த
சவாலான இந்த
விசாரணையை நடத்த, நியமிக்கப்பட்டுள்ள
மூன்று நிபுணர்களும்
ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த
மூன்று பேரும் தமது நிபுணத்தன்மை, அனுபவத்தின்
மூலம்
ஒருங்கிணைந்த, சுதந்திரமான, பாகுபாடற்ற
விசாரணையை மேற்கொள்வார்கள்
என்று முழுமையாக
நம்பலாம். இவர்களுக்கு உதவுவதற்காக
பல்வேறு துறைகளில்
நிபுணத்துவம் பெற்றுள்ள விசாரணை குழுவும்
அமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment