கல்முனை மாநகர சபையில் இனவெறித்தாக்குதலுக்கு
கண்டனபிரேரணைநிறைவேற்றம்
(ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்)
அளுத்கம,
தர்கா நகர்,
பேருவளை, வெலிப்பன்ன
மற்றும் நாட்டில்
பல பாகங்களிலும்
முஸ்லிம்கள் மீது நிழகந்து கொண்டிருக்கும் இனவெறித்
தாக்குதலைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில்
கண்டனத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை
மாநகர சபையின்
மாதாந்த சபை
அமர்வு நேற்று
25 ஆம் திகதி புதன்கிழமை முதல்வர் எம். நிஸாம்
காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இக்கண்டனத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சபை
அமர்வின்போது மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும்
கறுப்புப் பட்டி
அணிந்தவண்ணம் பங்கேற்றிருந்தனர்.
மாநகர
முதல்வர் நிஸாம்
காரியப்பர் இக்கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
முதல்வரால்
சமர்ப்பிக்கப்பட்ட இக்கண்டன பிரேரணைக்கு
ஆதரவு தெரிவித்து
சபையின் அனைத்து
உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் மறந்து உரையாற்றினார்கள்.
இக்கண்டனத்தில்
முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும்
இனவெறித்தாக்குதலை தூண்டும் பொதுபலசேனை
மற்றும் சிஹல
ராவய ஆகிய
அமைப்புக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புக்களையும் கண்டித்து உறுப்பினர்களின் உரை காணப்பட்டதுடன்
சிறுபான்மை மக்களின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பில்
உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டும் எனவும் அரசாங்கத்திடம்
கேரிக்கை விடுக்கப்பட்டது
இக்கண்டன
தீர்மானம் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டது.
இக்கண்டனத்
தீர்மானம் அனைத்து
உறுப்பினர்களினதும் கையொப்பத்துடன் ஜனாதிபதி,
முஸ்லிம் அமைச்சர்கள்
மற்றும் முஸ்லிம்
நாடுகள் உள்ளிட்ட
முக்கிய நாடுகளின்
தூதுவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர்
நிஸாம் காரியப்பர்
சபைக்கு அறிவித்தார்.
0 comments:
Post a Comment