மதம் மாறி
திருமணம் செய்த பெண்ணுக்கு
விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து
சூடானில் ஒரு கிறிஸ்தவ தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்த மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது
அப்துல்லா என்ற பெண்,
கிறிஸ்தவ முறையில் வளர்க்கப்பட்டார்.
அவர் ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து
கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், முஸ்லிமான மெரியம், கிறிஸ்தவரை திருமணம் செய்து
கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு தூக்கு
தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலேயே அவருக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில், மெரியம்மை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகளும், பல்வேறு அரசுகளும் கோரிக்கை விடுத்தன. ,
மெரியம்மின் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மேல்முறைமனுவை விசாரித்த நீதிபதி, மெரியம்மை விடுதலை செய்துள்ளார். அவர் பாதுகாப்பான இடத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment